ஆளுமை:வினுசா, நடராஜா
பெயர் | வினுசா |
தந்தை | நடராஜா |
தாய் | இராஜேஸ்வரி |
பிறப்பு | 1999.05.23 |
ஊர் | கிளிநொச்சி |
வகை | விளையாட்டு |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வினுசா, நடராஜா கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்த விளையாட்டு வீராங்கனை. இவரது தந்தை நடராஜா; தாய் இராஜேஸ்வரி. ஆரம்ப, இடைநிலைக் கல்வியை உருத்திரபுரம் மகாவித்தியாலயத்திலும் உயர்நிலைக் கல்வியை கிளி / கிளிநொச்சி இந்துக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதில் இருந்தே விளையாட்டுத்துறையில் ஈடுபாடு கொண்ட வினுசா பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் சம்பியான திகழ்ந்தார்.
தொடந்து Roll Ball எனப்படும் உருள் பந்து 2013ஆம் அண்டு இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்ட வினுசா 2016ஆம் ஆண்டு தொடக்கம் Roll Ball குழுவில் இடம்பிடித்து பாடசாலை மட்டத்தில் விளையாடி வந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டே Roll Ball அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கொழும்புக்குச் சென்று தேசிய விளையாட்டில் விளையாடிய Roll Ball குழுவில் இவர் இடம்பிடித்தார். அத்துடன் 2018ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் Roll Ball குழுவிலும் இவர் இடம்பிடித்து இலங்கை சார்பாக கலந்து கொண்டுள்ளார். இலங்கை Roll Ball குழு ஆசிய விளையாட்டுப் போட்டியில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டாலும் வினுசா நடராஜா அவர்களுக்கு Best Keeper என்ற விருது ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்தது. தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண Roll Ball குழுவிலும் இவர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பு : மேற்படி பதிவு வினுசா, நடராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.