ஆளுமை:வினாசித்தம்பிப் புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வினாசித்தம்பிப் புலவர்
பிறப்பு 1887
இறப்பு 1930
ஊர் மட்டக்களப்பு
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வினாசித்தம்பிப் புலவர் (1887 - 1930) மட்டக்களப்பு, தில்லைமண்டூரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் புலோலியூரைச் சேர்ந்த சந்திரசேகரப் பண்டிதரிடத்திலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு உபாத்தியாரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் புராண இதிகாசங்களையும் கற்றுக் கொண்டார்.

இவர் தனது இல்லத்தில் திண்ணைப்பள்ளிக்கூடத்தை நிறுவி புராணங்கள், நீதிநூல்களைக் கற்பித்து வந்தார். முருகக் கடவுள் மீது பக்தி உடையவராக விளங்கிய இவர், முருகன் திருவருளைப் போற்றி பல பிரபந்தங்களை இயற்றியுள்ளார். இவர் மண்டூர் முருகன் காவடிப்பாட்டு, மண்டூர் வடிவேலவர் குறம், கதிர்காமத்தந்தாதி, திருச்செந்தூர் முருகன் பதிகம், தில்லை நடராசர் பதிகம் போன்ற நூல்களை இயற்றினார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 205-206