ஆளுமை:ரினுஜா, சிவசங்கர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரினுஜா
தந்தை கணேசமூர்த்தி
தாய் சந்திரமணி
பிறப்பு 1987.11.19
ஊர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி
வகை ஓவியர், கலைஞர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரினுஜா, சிவசங்கர் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் பிறந்த ஓவியக் கலைஞர். இவரது தந்தை கணேசமூர்த்தி; தாய் சந்திரமணி. ஆரம்பக் கல்வியை மட்/விநாயகர் வித்தியத்திலயத்திலும், இடைநிலை , உயர்நிலைக் கல்வியை மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையிலும் கற்றார். கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கட்புலக்கலை துறையில் இளம் நுண்கலைமாணி பட்டம் பெற்று அதே துறையில் உதவி விரிவுரையாளராக 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை கடமையாற்றியுள்ளார். தற்போது தொடர்ந்து அங்கு விரிவுரையாளராக் கடமையாற்றி வருகின்றார்;. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு டி.ஆர்.ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழத்தில் ஓவியத்துறையில் முது நுண்கலைமாணி (Master of Fine Arts)painting பட்டப்படிப்பினை பயின்று கொண்டிருக்கிறார். இவர் ஓவியத்துறையில் மட்டுமல்லாது சிற்பத்துறையிலும் விசேட பயிற்சி பெற்றவர். சிற்பத்துறையில் பெண் கலைஞர்கள் இலங்கையில் மிகக்குறைவாகவே காணப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஓவியங்கள் சமுகம் சாந்த பிரச்சினைகளையும், பாரம்பரிய விடயங்கள் தொடர்பாகவும் குறிப்பாக பெண்கள் சார்ந்த விடயங்களையும் தனது ஓவியத்தின் ஊடாக வெளி உலகிற்கு கொண்டு வந்துள்ளார். பல நூல்களிலும் சஞ்சிகைகளிலும் ,இவரின் ஓவியங்கள் அட்டைப்படமாக வெளியாகியுள்ளன. தற்போது களிமண்ணிலான சிற்பங்கள், மணற்சிற்பங்கள் போன்ற சிற்பத் துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் பல ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளார். இதில் எண்ணெய் வர்ண ஓவியங்கள், நீர் வர்ண ஓவியங்கள், பஸ்ரல்வர்ண ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், பேனா ஓவியங்கள் என பல வகை ஓவியங்களை வரைந்து வரும் ஓவியர் அந்தவகையில் பல தடவைகள் ஓவியக் கண்காட்சியினை வைத்துள்ளார். கைவினை ,கவிதை, பாடல், திறனாய்வு, என பன்முகத்திறமைகளைக் கொண்டவர்.


விருதுகளும், கண்காட்சிகளும் 2020இல் இந்திய நிறுவனம் நடாத்திய நீர்வர்ண சர்வதேச ஓவியப் போட்டியில் இவரின் ஓவியம் சிறந்த ஓவியங்களில் ஒன்றாகத் தெரிவாகி சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் இணையத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. 2019 இல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்ற மணற் சிற்பக்கண்காட்சியில் மணலினால் செய்யப்பட்ட சிற்பத்தினை காட்சிப்படுத்தினார். 2018 இல் இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில்” தோரணம்” எனும் ஓவியக்கண்காட்சியில் தனது ஓவியங்கள் பலவற்றை காட்சிப்படுத்தினார். 2018 இல் மட்டக்களப்பு களுதாவளையில் கண்ணகி விழாவை முன்னிட்டு கண்ணகி வழிபாடு தொடர்பான பல ஓவியங்கள் காட்சிப்படுத்தினார். 2015 இல் இந்தியாவின் கேரளாவில் நடைபெற்ற ART MAESTRO AWARD சர்வதேச ஓவியப் போட்டியில் சான்றிதழ் பெற்றதுடன் இவரின் ஓவியமும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. 2012 இல் மட்டக்களப்பில் உள்ள அரங்க ஆய்வு கூடத்தில் ‘கட்புல நர்த்தனம்’ எனும் ஓவிய சிற்பக் கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளார். 2006 இல் சுனாமி அனர்த்தத்தினாலிருந்து மீளக்கட்டி எழுப்புவோம் எனும் தலைப்பில் நியுயோக்கில் நிகழ்ந்த ஓவியப் போட்டியில் தெரிவாகி சான்றிதழும் பணப்பரிசும் பெற்றுள்ளார். 2006 இல் சுனாமி அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட ஓவியர்களின் ஓவியங்களில் இவரின் சுனாமி ஓவியமும் தெரிவாகி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகாத்த மண்டபத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. தேசிய மட்ட கண்காட்சியில் ஓவியங்களை காட்சிப்படுத்தி பாராட்டும் சான்றிதழும் பெற்று வருவதோடு பல சர்வதேச ஓவியப் போட்டிகளிலும் பங்குபற்றி கொண்டு வருகின்றார் தொடர்ந்து ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார் ’ஓவியர் ரினுஜா சிவசங்கர்

குறிப்பு : மேற்படி பதிவு ரினுஜா சிவசங்கர் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது


வெளி இணைப்புக்கள்