ஆளுமை:மேரி லூட்ஸ் யோசப், அந்தோனிப்பிள்ளை யோசப்
பெயர் | மேரி லூட்ஸ் யோசப் |
தந்தை | அந்தோனிப்பிள்ளை யோசப் |
தாய் | செசிலியா அருளானந்தம் |
பிறப்பு | 1949.07.05 |
ஊர் | நெடுந்தீவு |
வகை | அருட்பணி, சமூகசேவை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சகோதரி.மேரி லூட்ஸ் யோசப், அந்தோனிப்பிள்ளை யோசப் (1949.07.05 - ) கரம்பன், ஊர்காவற்றுறையில் பிறந்த இவர் கல்வியை மிரிகாமம், கரம்பன் சிறிய பாடசாலையிலும் கரம்பன் புனித திரோசா பாடசாலையிலும், திருக்குடும்ப கன்னியர் சபை மடத்திலும் பயின்றார். தனது பதினெட்டாவது வயதில் யாழ்.திருக்குடும்ப கன்னியர் சபையின் துறவியானார். நகர சபைத்தொழிலாளிகளுக்கு அபிவிருத்தி தொடர்பாக பணியாற்றி வந்தார். சுன்னாகம் பகுதியில் குண்டுத்தாக்குதலினால் கால்களை இழந்த இயைஞர்களுக்கு சேவை செய்யும் முகமாக ஜெய்ப்பூர் செயற்கைக்கால் திட்டத்தில் இணைப்பாளராக சமூகப்பணியை ஆரம்பித்தார். மாற்றுத்திறனாளினள் வாழ்வில் ஒளி விளக்காகத் தோன்றினார்.
1980 ஆம் ஆண்டில் கிராமிய மட்டத்திலான விஷேட தேவைக்குட்பட்டோர் புனர்வாழ்வு (Dip.UK) நேபறாட் புலமைப்பரிசில்-லண்டனில் பெற்றார்.1982 ஆம் ஆண்டில் தாதிப்பயிற்சி டிப்ளோமாவை திருச்சியில் பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான சேவைகளை முன்னெடுப்பதற்காக 1981 ஆம் ஆண்டில் அறோட்(AROD) நிறுனத்தை ஆரம்பிப்பதற்கு காரணமாய் இருந்தார். 1991 ஆம் ஆண்டில் கறோட் (KAROD)நிறுவனத்தை கிளிநொச்சியில் ஸ்தாபித்தார். மன்னாரில் மாடப்(MARDAP) நிறுவனத்தையும், முல்லைத்தீவில் மறோட் (MAROD)நிறுவனத்தையும் ஆரம்பித்தார். ஓகான்(ORHAN) நிறுவனத்தை வவுனியாவில் தொடங்கினார். விஷேட தேவைக்குட்பட்டோர் வலையமைப்பை கிளிநொச்சியில் உருவாக்கினார் .ASSETS நிறுவனத்தை கிளிநொச்சியில் உருவாக்கினார். போரின் பின் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவையை அவரது சபை காத்திரமாகக்கொள்ளாததும் ஆதரவளிக்காத காரணத்தினாலும் சபையின் மதில்களைக்கடந்து பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்காக தனது வாழ்வை முற்றாக அர்ப்பணித்து திருக்குடும்ப சபையின் ஸ்தாபகர் அருட்பணி “பீற்றர் பியன்வெனு“ வின் அடிகளைப் பின்பற்றி மாற்றுத்திறனாளிகள் யாசகர்களாக உலாவருவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அதனை நோக்காகக் கொணடதனாலும் தனது சபையால் ஆதரவு கிடைக்காமையாலும் சபையிலிருந்து கடந்த எட்டு வருடங்களாக விலகி பயனாளிகளோடு தங்கி நிரந்தர காப்பகம் ஒன்றை நிறுவி அவர்கள் வாழ்வில் நம்பிக்கையும் மகிழ்வும் நிறைவாகக் கிடைக்க விஷேட தேவைக்குட்பட்டோர் மகிழ்வகம். என்னும் நிறுவனத்தை ஸ்தாபித்து ஸ்தாக இயக்குனராக பணியாற்றுகிறார்.