ஆளுமை:மாதங்கி, செல்வராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாதங்கி
தந்தை செல்வராஜா
தாய் சாம்பவி
பிறப்பு 1987.10.28
ஊர் கரம்பன் மூளாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாதங்கி, செல்வராஜா (1987.10.28) யாழ்ப்பாணம் கரம்பன் மூளாயில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை செல்வராஜா; தாய் சாம்பவி. யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றார். இளங்கலைமாணி வியாபார முகாமைத்துவம் (UK), BA (Hons) முதுகலை வணிக மேலாண்மை(MBA),பட்டமேற்படிப்பு டிப்ளோமா சந்தைப்படுத்தல் (SLIM). 2007 ஆம் ஆண்டில் வணிக மேலாண்மையில் தனது இளங்கலைமாணி பட்டத்தைப் பெற்றமையால் படிப்பைத் தொடர உலக வங்கி உதவித்தொகை வழங்கப்பட்டது.

Noro Solutions எனும் நிறுவனத்தின் பணிப்பாளராக உள்ள தொழில்முனையும் பெண் ஆளுமை மாதங்கி. இந்த நிறுவனத்தின் ஊடாக உள்ளுரில் வியாபாரம் ரீதியில் தமது தொழிலை ஆரம்பிக்க விரும்புபவர்களுக்கு ஆலோசனைகைளை வழங்கி வருகிறார். அதேபோல் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் இணைந்தும் வேலைகள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றார். வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் நிர்வாக ரீதியான வேலைகளையும் அவர்களின் தொலைத்தொடர்பு மத்திய நிலைங்களின் வேலைகளையும் செய்வதாகத் தெரிவிக்கும் மாதங்கி இலண்டனில் உள்ள British Tamil Chamber of Commerce வேறும் சில நிறுவனங்களுடன் இணைந்து இவரின் Noro Solutions நிறுவனம் இணைந்து பணிகளை செய்து வருகிறது. சிறு வயது முதலே வியாபாரத்துறையில் ஈடுபட வேண்டுமென்ற இவரின் சிந்தனைதான் தொழில்முனையும் பெண்ணாக உருவாகக் காரணமெனத் தெரிவிக்கின்றார். பெண்கள் வியாபாரத் துறையில் சாதிப்பது குறைவாக இருந்தாலும் தன்னிடம் அரச வேலைகளையும் வங்கி வேலைகளையும் செய்யுமாறு பலர் பரிந்துரை செய்தாலும் வியாபாரத்துறையில் கால் பதித்துள்ளார் இப் பெண் ஆளுமை. இவரின் கனவை நனவாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார் மாதங்கி.

பெண் என்ற வகையில் சமூகத்தில் எதிர்மறையான கருத்துக்களை பலர் கூறியதாகத் தெரிவிக்கும் இவர் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் வியாபாரத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரின் அடுத்த கட்ட நகர்வாக சர்வதேச ரீதியில் வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டுமென்பதேயாகும். NORO Solutions இணையத்தளத்தின் ஊடாக வியாபாரம் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருவதுடன் வியாபார ரீதியில் தொழில்முனைவோருக்கான வளவாளராகவும் செயற்பட்டு வருகிறார். இவரது நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்களாக நான்கு பேர் வேலை செய்கிறார்கள் இவரின் நிறுவனத்தின். புதிய செயற்றிட்டங்கள் அமுல்படுத்தப்படும் போது ஒப்பந்த அடிப்படையில் அவ்வப்போது வேலைக்கு சிலர் அமர்த்தப்படுகிறார்கள். தமிழ் வர்த்தகத் தளம் எனும் இணையத்தின் ஊடான விளம்பர சேவையை செய்து வருகிறார்.

விருதுகள்

வடக்கின் தொழில்முனைபோருக்கான விருதை பெற்றுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு மாதங்கி, செல்வராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்

  • [http://norosolutions.com/ மாதங்கி, செல்வராஜா தொடர்பாக நோரோ சொலுசன் இணையத்தில் பார்வையிடலாம்)