ஆளுமை:மலரன்பன்
பெயர் | மலரன்பன் |
பிறப்பு | |
ஊர் | மாத்தளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மலரன்பன் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மாத்தளைக் கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில் கல்வி கற்று ஐந்து வருடங்கள் ஆசிரியராகப் பணிபுரிந்து பின்னர் தனியார் நிறுவனமொன்றில் நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார். இவர் தினபதியில் வெளியான பார்வதி என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். இச்சிறுகதை தமிழமுதுச் சஞ்சிகையில் அவளொன்று நினைக்க என்ற தலைப்பில் 1970 இல் மறுபிரசுரமானது.
மலரன்பன் 1975 இல் எழுதிய உலகம் யாருக்காக என்ற திரைக்கதை வசனக் கையெழுத்துப் பிரதிக்குத் திரைப்படக் கூட்டுத்தாபனம் (B) தரம் வழங்கியது. இவர் இசைத்துறையில் ஈடுபாடு கொண்டவர். இவரது மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியிலும் ரூபவாஹினியிலும் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளது. இவரது சிறுகதைகளில் மலையக மக்களின் அவலங்கள் இழையோடியிருக்கும். இவர் தோட்டக்காட்டினிலே, கொடிச்சேலை, மலை இலக்கியம் முதலான சிறுகதைத் தொகுதிகளை ஆக்கியுள்ளார். இவற்றில் கோடிச் சேலை என்ற சிறுகதைத் தொகுதி 1989 ஆம் ஆண்டுக்கான சாகித்தியப் பரிசைச் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 4293 பக்கங்கள் 139-141
- நூலக எண்: 11134 பக்கங்கள் 02-03
- நூலக எண்: 13660 பக்கங்கள் 53-58