ஆளுமை:மருசலீன் றீற்ரா ஜென்சி, சிரியேன்
பெயர் | செல்வி மருசலீன் றீற்ரா ஜென்சி |
தந்தை | சிரியேன் |
தாய் | பூமணி |
பிறப்பு | 1975.01.28 |
ஊர் | கிளிநொச்சி, புலோப்பளை |
வகை | இசைக்கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மருசலீன் றீற்ரா ஜென்சி, சிரியேன் (1975.01.28 - ) புலோப்பளையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இசைக்கலைஞர். இவரது தந்தை சிரியேன்; தாய் பூமணி. தற்போது பளைபிரதேச சபை நூலக உதவியாளர்
1988 ஆம் ஆண்டில் பாவோதல் போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடமும், 1989 ஆம் ஆண்டு மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் மாகாண மட்டத்தில் மூன்றாம் இடமும் கிடைத்தது. யுத்தத்திற்கு பின் சிறிது காலம் பளைபிரதேச சபை நூலக உதவியாளராக பணியாற்றினார். இவர் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றிய போது மாணவர்களுக்கு இசைக்கலைகளை கற்பித்தார். 2005ஆம் ஆண்டு தனி இசைப்போட்டியில் மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும், குழு நிகழ்வில் 2ஆம் இடத்தினையும் இவரது மாணவர்கள் பெற்றனர்.
2004 ஆம் ஆண்டில் வீரமணி ஜயரின் நினைவு தினத்திற்காக இடம்பெற்ற இசைக்கச்சேரியில் ஒருவராக செயல்பட்டார். 2001இல் திலகநாயகம்போல் அவர்களுடன் இணைந்து புலோப்பளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இசைக்கச்சேரி செய்துள்ளார். பளைப்பிரதேச கலாசார பேரவையின் கீதம் ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்டமைக்கும், இசைக்கப்பட்டமைக்கும் இவர் பிரதானமானவராக இருந்தார்.