ஆளுமை:புஷ்பநாதன், சபாபதி
நூலகம் இல் இருந்து
பெயர் | புஷ்பநாதன் |
தந்தை | சபாபதி |
பிறப்பு | 1949.02.09 |
ஊர் | இணுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புஷ்பநாதன், சபாபதி (1949.02.09 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சபாபதி. இவர் ஈழநாடு சசி, சபாரத்தினம், வீரகேசரி டேவிட் ராஜ், தினகரன் பாமா ராஜகோபால், உதயன் கானமயில்நாதன், சிற்பி சரவணபவன் ஆகியோரிடம் தனது கல்வியைக் கற்றார்.
இவர் 1960 ஆம் ஆண்டுகளில் ஈழகேசரியில் கடகத்துள் போடு தம்பி என்ற நகைச்சுவைத் துணுக்குடன் எழுத்துத்துறையில் பிரவேசித்தார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் 1960 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் போன்ற ஒலிபரப்பு நிலையங்களில் இளையோர் வட்டத்தில் தெரிந்த விஞ்ஞானம் தெரியாத உண்மைகள் என்ற தலைப்பில் தொடர்ந்து 50 வாரங்கள் 10 நிமிட உரையைத் தாமே தயாரித்து வழங்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 40