ஆளுமை:பாஸ்கரன் ஆசாரி, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாஸ்கரன் ஆசாரி
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1949.05.09
ஊர் அராலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாஸ்கரன் ஆசாரி, சுப்பிரமணியம் (1949.05.09 - ) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். சிறுவயதிலிருந்து சிற்பத் தொழிலை செய்துவரும் இவர், நாற்பது வருடங்களுக்கு மேலான அனுபவம் மிக்கவராவார்.

இவர் வெள்ளிக் கிரீடங்கள், திருவாசிகள், வெள்ளியிலான கவசங்கள், கோபுரக் கலசங்கள், தங்கக் கிரீடங்கள் மட்டுமல்லாது 1965 ஆம் ஆண்டு முதல் ஆயிரக் கணக்கில் இறை மூர்த்தங்களைப் பஞ்சலோகத்தில் உருவாக்கித் தன் அளப்பரிய கலைத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அத்தோடு வெள்ளி, பித்தளை மற்றும் மரத்திலான நினைவுச் சின்னங்கள் பலவற்றை மக்களின் தேவைக்கேற்ப வடிவமைத்து, அவர்களின் தேவையை நிறைவு செய்துள்ளார்.

இவரது கலைப்பணியைப் பாராட்டிச் சிற்ப ஞானகேசரி, சிற்பக்கலாபூபதி, கலாரட்ணா, சிற்பக்கலை ஞானபானு, சிற்பக் கலைமாமணி, சிற்பக் கலாசாஸ்திர கலாநிதி, கலாஜோதி, சிற்பக் கலாவித்தியாசாகரன், சிற்பக் கலாவேந்தன், கலைஞானச் சுடர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 207
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 253