ஆளுமை:பாலேஸ்வரன், பொன்னம்பலம்
பெயர் | பாலேஸ்வரன் |
தந்தை | பொன்னம்பலம் |
பிறப்பு | 1947 |
ஊர் | வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலேஸ்வரன், பொன்னம்பலம் (1947) யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் பிறந்த கலைஞர். அராலி இந்துக் கல்லூரியில் ஆரம்ப இடைநிலைக் கல்வியை கெற்றார். யாழ் ஆனைப்பந்தி உயர் கலைக் கல்லூரியில் க.பொ.த.உயர்தர விஞ்ஞான கல்வியை கற்றுக்கொண்டார். சிறு வயதில் ஓவியத்துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக ஐந்து வருடங்கள் ஓவியக்கலையில் பயிற்சி பெற்றார். கிளிநொச்சி நீர்ப்பாசன இலாகாவில் நிறம் தீட்டுபவராக 4 வருடங்கள் பணியாற்றிய இவர் சுயதொழில் நாட்டம் கொண்டு ஓவியத்துறையை தேர்ந்தெடுத்தார்.
வரன் ஆட்ஸ் எனும் அமைப்பை நிறுவி அதன் ஊடாக கலைப்பணியை செய்துள்ளார். ரேவதி எனும் புனை பெயரில் உயிரோவியம் எனும் தலைப்பில் ஓவியங்களின் தொகுப்பொன்றினை மாணவர்கள் படிப்பதற்கான கலைத்திட்டமாக வடிவமைத்து உள்ளார். வர்த்தக ஓவியங்களை அதிகம் வரைந்து வரும் கலைவாணி நாடக மன்றம் மூலம் பாலேஸ்வரன் நாடகங்கள் நடிப்பதிலும் பாடல்கள் எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர். சுனாமி பாடல் இசை இறுவட்டையும் இவர் வெளியிட்டுள்ளார்.
விருதுகள் நவரச திலகம் பட்டம் ஓவியச்சுடர் கலைஞானி வடமாகாண ஆளுனர் விருது 2008.
வளங்கள்
- நூலக எண்: 8565 பக்கங்கள் 67