ஆளுமை:பாரதிதாசன், கதிரமலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாரதிதாசன்
தந்தை கதிரமலை
பிறப்பு 1952.10.24
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாரதிதாசன், கதிரமலை (1952.10.24) மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை கதிரமலை. மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பரிசளிப்பின் இராவணேசன் ஆணை, சூழ்ச்சி வென்றது ஆகிய நாடகங்களை மேடையேற்றியதன் ஊடாக நாடக துறைக்குள் பிரவேசித்தார்.

48 நாடகங்களில் நடித்துள்ள இவர் சரித்திரர, சமூக, இதிகாச, நகைச்சுவை நாடங்களையும் தயாரித்து மேடையேற்றியுள்ளார். இதயதீபம் என்னும் சமூக நாடகத்தில் இரு பிரதான கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றார். நிம்மதி, துயரம், வாழ்ந்தது போதும், பணமிருக்கும் வரை, கர்ணனின் கடைசி ஆசை போன்ற நாடகங்களும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கிலங்கையின் காந்தி இளைஞர் கலை மன்றத்தின் தலைவராகவும் மட்டக்களப்பு தமிழ் நாடக மன்றத்தின் தலைவராகவும், மண்முனை வடக்கு கலாசாரப் பேரவையின் உறுப்பினராகவும் உள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவை, மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை, இந்து சமய அபிவிருத்திச் சபை என்பன இவரை பாராட்டி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 76276 பக்கங்கள் 62