ஆளுமை:பாயிஸா, அலி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாயிஸா அலி
தந்தை அப்துல் சலாம்
தாய் றைஹானத்
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாயிஸா அலி திருகோணமலை கிண்ணியாவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் சலாம்; தாய் றைஹானத் ஒரு ஆசிரியர். தி/கிண் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், குறிஞ்சாக்கேணி அரபா மகாவித்தியாலயத்தில் சாதாரண தரம் வரையிலும், கிண்ணியா மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவிலும் கல்வி கற்றுள்ளார். பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரின் எழுத்துலகப் பிரவேசம் பாடசாலைக் காலங்களிலேயே ஆரம்பித்துள்ளது. பாடசாலையில் படிக்கும் போதே பத்திரிகைகளில் சிறுவர் பகுதி, வானொலி சிறுவர் நிகழ்ச்சி போன்றவற்றிற்கு ஆக்கங்கள் கவிதைகள் கட்டுரைகள், துணுக்குகள் எழுதும் பழக்கத்தை எழுத்தாளர் கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார். தினகரன், சிந்தாமணி போன்ற பத்திரிகைளில் இவரின் ஆக்கங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் போதே வெளிவந்ததாகத் தெரிவிக்கிறார். பாடசாலை கலை நிகழ்ச்சிக்காக வில்லுப்பாட்டு, நாடகங்கள், இஸ்லாமிய கீதங்களும் பாயிஸா எழுதியுள்ளார். இவரின் கவிதை பெண்கள், சிறுவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே அமைந்திருந்தமை விசேட அம்சமாகும். எங்கள் தேசம் பத்திரிகையின் பத்தி எழுத்தாளராக இருந்து வருகிறார். கட்டுரை, நேர்காணல், கவிதை, நூலாய்வுகள், சிறுகதைகள் என தொடர்ந்து ஊடகத்துறையில் தனது பங்களிப்பை செய்து வருவதோடு பிரதேச செயலக நினைவு மலர், நிகழ்காலம் சஞ்சிகை குழுவில் இணைந்து பணியாற்றி வரும் பன்முக ஆளுமை கொண்டவர் பாயிஸா.

விருது

மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு ஒன்றியம் வழங்கிய சிறுவர் இலக்கியத்திற்கான தமிழியல் விருது கிழக்கு மாகாண சாகித்திய விருது


படைப்புகள்

  • சிகரம் தொடவா (சிறுவர் பாடல்)
  • தங்கமீன் குஞ்சுகள் (சிறுவர் பாடல்)
  • எஸ்.பாயிஸா அலி கவிதைகள்
  • கடல் முற்றம் (கவிதை)

வளங்கள்

  • நூலக எண்: 8191 பக்கங்கள் 4-5
  • நூலக எண்: 8192 பக்கங்கள் 7
  • நூலக எண்: 8193 பக்கங்கள் 10
  • நூலக எண்: 8194 பக்கங்கள் 29
  • நூலக எண்: 8217 பக்கங்கள் 78
  • நூலக எண்: 10329 பக்கங்கள் 21
  • நூலக எண்: 10876 பக்கங்கள் 18
  • நூலக எண்: 14838 பக்கங்கள் 44
  • நூலக எண்: 15467 பக்கங்கள் 87
  • நூலக எண்: 16115 பக்கங்கள் 28-29
  • நூலக எண்: 16193 பக்கங்கள் 12
  • நூலக எண்: 16338 பக்கங்கள் 7
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாயிஸா,_அலி&oldid=408063" இருந்து மீள்விக்கப்பட்டது