ஆளுமை:பத்மநாபன், மகாலிங்கம்
பெயர் | பத்மநாபன் |
தந்தை | மகாலிங்கம் |
தாய் | பொன்னம்மா |
பிறப்பு | 1948.11.24 |
இறப்பு | - |
ஊர் | பெரியபரந்தன்,கிளிநொச்சி |
வகை | ஆசிரியசேவை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|

பத்மநாபன் மகாலிங்கம் (1948.11.24 -) பெரியபரந்தன்,கிளிநொச்சியைச் சேர்ந்த ஆசிரியர். இவரது தந்தை மகாலிங்கம்; தாய் பொன்னம்மா. இவர் தனது ஆரம்பக்கல்வியை பரந்தன் அ.த.க. பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ்.கொட்டடி நமசிவாய வித்தியாசாலை மற்றும் இராமகிருஸ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்திலும் பயின்றார். மீசாலையில் பிறந்த இவர் பெரியபரந்தன் எனும் ஊரினை. வசிப்பிடமாகவும் கொண்டவர்.
1972 ல் மன். இலகடிப்பிட்டி றோ.க.தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக பணி புரிந்தார். 1978ல் வசாவிளானிலுள்ள பலாலி அரசினர் ஆசிரிய கலாசாலையில் பயின்று 1982ல் கிளி.மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும் கடமை புரிந்தார். 1982ல் கிளி.மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், சாரணர் இயக்க பொறுப்பாசிரியராகவும் பணி புரிந்தார். மத்திய மகா வித்தியாலயத்தில் ROTARACT CLUB இனையும் ஆரம்பித்தார். இவர் கிளிநொச்சி தமிழ்சங்கத்தில் ஆயுட்கால உறுப்பினராகவும் உள்ளார். நாட்டுக்கூத்துப் போன்றவற்றை மாணவர்களுக்கு பயிற்றுவித்து மேடையேற்றி வந்தார்.
வெளி இணைப்புக்கள்
- [ https://vanakkamlondon.com/stories/2021/08/125071/ வணக்கம் லண்டன் இணையத்தளத்தில் இருந்து]
- சுப்ரம் சுரேஸ் அவர்களுடைய முகநூல் பக்கத்திலிருந்து