ஆளுமை:பத்மநாதன், நாக.
நூலகம் இல் இருந்து
பெயர் | பத்மநாதன் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பத்மநாதன், நா புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் தமிழீழ விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை இலக்கியமாக்கும் பணியில் போராளிகளுடனேயே வாழ்ந்து தகவல்களைத் திரட்டினார். இவரது படைப்புகள் சிரித்திரன், சுடர், வெளிச்சம், சாளரம், ஆதாரம் போன்ற இதழ்களில் பிரசுமாகியுள்ளன.
உருவகக்கதைகள் எழுதுவதில் சிறந்த இவர், வள்ளுவர் வழியில் வீரம், மானம், அதிர்ச்சி நோய் எமக்கல்ல போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். அத்தோடு சர்வோதயப் பணிகளில் ஆர்வம் கொண்ட இவர், க. திருநாவுக்கரசின் தொண்டு வாழ்க்கையோடு தன்னையும் இணைத்துப் பலகாலம் அளப்பரிய சேவைகளைச் செய்ததுடன் தனது கடைசிக்காலத்தில் லண்டனில் வாழ்ந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 247