ஆளுமை:நவரத்தினம், சிதம்பரப்பிள்ளை
பெயர் | சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் |
தந்தை | சிதம்பரப்பிள்ளை |
தாய் | பொண்ணு |
பிறப்பு | 1948.07.01 |
ஊர் | திருக்கோணமலை |
வகை | சமூக சேவையாளர், சிறுகதையாளர், கவிஞர், விமர்சகர், நாடக நெறியாளர், ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
"திருமலை நவம்" என அழைக்கப்படும் சிதம்பரப்பிள்ளை நவரத்தினம் ஒரு சிறுகதையாளர், கவிஞர், விமர்சகர், நாடக நெறியாளர், ஊடகவியலாளர் என பன்முக ஆளுமை கொண்ட ஒருவர் ஆவார். இவர் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னால் அதிபர் என்பதுடன், திருகோணமலையை பொருத்தமட்டில் இலக்கிய வரலாற்று ஆய்வுகளில் முக்கிய ஆளுமையாக காணப்படும் ஒரு நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வடமராட்சியின் வல்வெட்டி கிராமத்தில் 1948.07.01 அன்று சிதம்பரப்பிள்ளை என்பவருக்கு பிறந்தார். குறுகிய காலத்திலேயே திருக்கோணமலைக்கு இடம்பெயர்ந்த இவர் திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை கற்றதுடன், பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைமானி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். நீண்ட காலம் ஆசிரியர் சேவையில் பணியாற்றியதுடன், இவர் 1993 ஆம் ஆண்டு அளவில் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த கல்லூரியை பொருத்தவரை இவரது பதவிக்காலம் ஒரு பொற்காலமாக கருதப்படுகின்றது. இவரது காலப்பகுதியில் குறித்த கல்லூரி பல சாதனைகளை கல்வியிலும், ஏனைய துறைகளிலும் செய்ததுடன், உட்கட்டமைப்பு வசதிகளிலும் பாரிய வளர்ச்சி கண்டது என்பது மறுக்க முடியாத உண்மை.
மேலும் இவர் ஒரு அதிபராக இருந்த போதிலும், இலக்கிய துறையில் மிக ஆர்வம் கொண்ட ஒரு நபராகவும், தனது இலக்கிய வெளிப்பாடுகளை சிறுகதை, நூல், கவிதை என பல வடிவங்களில் வெளியிட்டு வந்ததுடன், தற்போது ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளராகவும், அரசியல் ஆய்வாளராகவும், வரலாற்று ஆய்வாளராகவும் அறியப்பட்டு வருகின்றார்.
இவர் "இராவணதேசம்" எனும் கன்னியா தொடர்பில் எழுதிய நூல் மிகவும் குறிப்பிடத்தக்க மதிப்பை பெற்றதுடன், கன்னியா தொடர்பிலான ஒரு வரலாற்று ஆவணமாக பார்க்கப்படுகின்றது. மேலும் போர்காலங்களில் திருகோணமலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் பல ஆவணத் திரட்டல்களை செய்துள்ளதுடன், அவற்றை வெளியிடுவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.