ஆளுமை:ஞானமாதங்கி, செல்வராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானமாதங்கி
தந்தை செல்வராசா
தாய் மகேஸ்வரி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானமாதங்கி, செல்வராசா யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்வராசா; தாய் மகேஸ்வரி. ஆரம்பக் கல்வியை மந்துவில் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். கிழக்குப் பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியல் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலையும் சிறப்புப் பாடமாகப் பயின்று இளம் நுண்கலைமாணிப் பட்டத்தை பெற்றுள்ளார் .அயர்லாந்து பல்கலைக்கழகத்தில் உளவளத்துணை டிப்ளோமா பட்டத்தை பெற்றுள்ளார்.

அஞ்சலியகம் நிறுவனத்தில் உளவளத்துணையாளராகப் பணிபுரிந்தார். ஐபிசி தமிழ் தயாரிப்பில உருவாகிய மர்மமக்குழல் தொடர் நாடகத்தின் இணை இயக்குனராகவும் நடிகையாகவும் இருந்தார். தற்போது ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். அத்துடன் உவங்கள் இணைய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இருப்பதோடு. சிறுகதை, கவிதை, நாடகம் என்பவற்றையும் எழுதி வருகின்றார். இவரின் ஆக்கங்கள் ஜீவநதி சஞ்சிகையிலும் உவங்கள் இணைய சஞ்சியிலும் வளிவந்துள்ளன.

குறிப்பு : மேற்படி பதிவு ஞானமாதங்கி, செல்வராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13966 பக்கங்கள் 16