ஆளுமை:ஜெயலட்சுமி, நடராஜமூர்த்தி

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:ஜெயலட்சுமி நடராஜமூர்த்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயலட்சுமி, நடராஜமூர்த்தி
பிறப்பு 1940.08.15
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயலட்சுமி, நடராஜமூர்த்தி (1940.08.15 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் 1959 - 1963 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழககத்தில் இசை பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றதுடன் யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கொழும்பு றோயல் கல்லூரியிலும் இசை ஆசிரியராகக் கடமையாற்றினார். க. பொ. த. சாதாரணதர, க. பொ. த. உயர்தர கர்நாடக சங்கீத பரீட்சைகளுக்கும் வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சைகளுக்கும் பிரதம பரீட்சகராகக் கடமையாற்றியுள்ளார். இவர் இலங்கை வானொலி, ரூபவாகினி ஆகியவற்றில் மெல்லிசை, கர்நாடக இசை நிகழ்வுகளில் பங்குபற்றியுள்ளார்.

இவரது இசைக் கச்சேரிகள் 2000 ஆம் ஆண்டில் இலண்டன், நியூயோர்க் நாடுகளிலும் 2002 ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் நடைபெற்றுள்ளன. இவரது ஆளுமையையும் இசைச்சேவையையும் பாராட்டிக் கலையரசு சொர்ணலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற கலைவிழாவில் 'இசைக்குயில்' என்ற பட்டமும் மானிப்பாய் இந்துக் கல்லூரியால் 'இசையரசி' என்ற பட்டமும் கலாபூஷணம் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 78-79