ஆளுமை:ஜெயபாலன், தம்பிராசா

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:ஜெயபாலன், த. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயபாலன்
தந்தை தம்பிராசா
தாய் பத்மாவதி
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயபாலன், தம்பிராசா யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா; தாய் பத்மாவதி. இவர் யா. கார்த்திகேய வித்தியாலயம், யா. விக்ரோரியாக் கல்லூரி, யா. வட்டு இந்துக் கல்லூரி, LONDON WALTHAM FOREST COLLEGE ஆகியவற்றில் கல்வி கற்று விஞ்ஞானத்துறை தேசிய டிப்ளோமாக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தார்.

1997 இல் எழுத ஆரம்பித்து அரவிந்தன், ரவிராஜ், வாணிஸ்ரீ ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகளை எழுதினார். தனது முதலாவது ஆக்கமான முத்தரப்புத் தோல்வி: இலங்கை - இந்திய ஒப்பந்தம் கட்டுரையைத் தேசம் பத்திரிகையில் எழுதியுள்ளார். இவர் தேசம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். உதயன் பத்திரிகையின் ஆசிரியர். 100 இற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார்.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 37-41

வெளி இணைப்புக்கள்