ஆளுமை:சுப்பிரமணியம், அம்பலப்பிள்ளை.
பெயர் | சுப்பிரமணியம் |
தந்தை | அம்பலப்பிள்ளை |
தாய் | தெய்வானைப்பிள்ளை |
பிறப்பு | 1931.03.05 |
இறப்பு | 1989.11.27 |
ஊர் | யாழ்ப்பாணம், கொல்லங்கலட்டி |
வகை | அரசியல் தலைவர், இடதுசாரி |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
![Suppiramaniyam.jpg](/wiki/images/c/cf/Suppiramaniyam.jpg)
சுப்பிரமணியம் அம்பலப்பிள்ளை (1931.03.05 - 1989.11.27) யாழ்ப்பாணம், கொல்லங்கலட்டி இவரது தந்தை அம்பலப்பிள்ளை தாய் தெய்வானைப்பிள்ளை. இவர் ஆரம்பக் கல்வியை கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியிலும், பின்னர் இளவாலை ஹென்றி அரசர் கல்லுாரியில் கல்வி கற்றார். 1950ல் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்காலையில் பொறியியற் பிரிவின் பயிலுணாராகப் பணிபுரிந்தவர். மாக்சிச சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டார். 1962 ஆம் ஆண்டில் ஆசிரியையான வள்ளியம்மை என்பவரைக் காதலித்துக் கலப்புத் திருமணம் புரிந்து கொண்டார். பின்னர் இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி(இடது)யின் பொதுச்செயலாளராக கடைமையாற்றியவர். சாதிய சமூக ஏற்றத்தாள்வு, சமூக நீதி மறுப்பிற்கு எதிராக பேராடியவர். 1963இல் வாலிபர் இயக்கத்தின் வடபிராந்திய செயலாளராக செயற்பட்டார். 1966இல் ஒக்டோபர் 21 எழுச்சியில் இவரது பங்களிப்பு முக்கியமானது.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் வரை பொதுவுடைமைவாதியாக முழு நேர அரசியலில் உழைத்து வந்தவர். தேசிய கலை இலக்கிய பேரவையின் நிறுவனர்களில் ஒருவர், தாயகம் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இருந்தவர். 1978 -1981 காலப் பகுதியில் Red Banner என்ற ஆங்கிலப் பத்திரிகையில் பல கட்டுரைகளையும் ஏனைய அனைத்து ஆசிரிய தலையங்கங்களையும் அவரே எழுதினார்.
வெளி இணைப்புக்கள்
https://web.archive.org/web/20110915170652/http://www.ndpsl.org/seithikal2d.php?newsid=91102 https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D https://www.marxists.org/history/erol/sri-lanka/history.pdf https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(021)_1990.01-02 https://sathiamanai.blogspot.com/2012/09/1969-02-05-1969.html https://sathiamanai.blogspot.com/2012/11/1978-1981-red-banner.html