ஆளுமை:சண்முகதாசன், தாமோதரம்பிள்ளை
பெயர் | சண்முகதாசன் |
தந்தை | தாமோதரம்பிள்ளை |
பிறப்பு | 1944 |
இறப்பு | 1967 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகநாதன், தாமோதரம்பிள்ளை (1944 - 1967) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்ற இவர், 1964 ஆம் ஆண்டு 'கலைச்செல்வி' சஞ்சிகை நடாத்திய சிறுகதைப் போட்டியில் 'வெறியும் பலியும்' சிறுகதையை எழுதி முதற்பரிசைப் பெற்று எழுத்துலகில் பிரபல்யமானார்.
முனியப்பதாசன் என்ற புனைபெயரில் எழுத்துலகில் அறிமுகமாகி 1967 ஆம் ஆண்டு வரையான மூன்றாண்டு காலப்பகுதிக்குள் இருபது சிறுகதைகள் வரையில் எழுதினார். ஆன்மீகத் தேர்தல், அம்மா, நிமிடப்பூக்கள், துறவி, சத்தியத்தின் குரல், பிரவாகம், ஆணிவேர், அழிவும் தேய்வும், பிரபஞ்சப் பூ இவரது படைப்புக்களில் சில. ஈழத்துப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் உதிரிகளாகக் கிடந்த இப்படைப்பாளியின் சிறுகதைகளைச் செங்கையாழியனும் மல்லிகை டொமினிக் ஜீவாவும் தேடித்தொகுத்து 'முனியப்பதாசனின் சிறுகதைகள்' என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளனர்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 55