ஆளுமை:இராசநாயகம், கந்தையா
பெயர் | இராசநாயகம் |
தந்தை | கந்தையா |
பிறப்பு | 1944.06.12 |
ஊர் | பெரியவிளான் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராசநாயகம், கந்தையா (1944.06.12 - ) யாழ்ப்பாணம், பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் மிருதங்கம், தபேலா, டொல்கி, டோல், தவில், கெஞ்சிரா, உடுக்கு, உறுமி போன்ற வாத்தியக் கருவிகளை வாசிப்பதிலும் அவற்றை உருவாக்குவதிலும், திருத்துவதிலும் வல்லவர். இவர் இலங்கை அரசின் கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் சிற்றூழியராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் தச்சுத் தொழில் ஆற்றலுள்ளவராக விளங்கியமையால் மரக்கொட்டுகளைக் குடைந்து அதில் மிருகங்களின் தோலினை இணைத்து வாத்திய இசைக்கருவிகளை உருவாக்கி விற்பனை செய்து வந்தார். சங்கீத இசைஞானமின்றி கேள்விஞானத்தைப் பின்பற்றித் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்ட இக்கலைஞர் இசை நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், சின்னமேளக் கச்சேரிகள், இசைக்கச்சேரிகள் போன்றவற்றிற்குப் பக்கவாத்தியம் இசைத்து வந்துள்ளார். 2004 இல் வடக்குக் கிழக்கு மாகாண கைத்தொழில் கண்காட்சியில் இவரால் செய்யப்பட்ட இரண்டு வாத்தியங்களுக்கு முதலிடமும் வேறு ஒரு வாத்தியக் கருவிக்கு இரண்டாமிடமும் கிடைத்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 101
- நூலக எண்: 15444 பக்கங்கள் 101