ஆளுமை: மிமலாதேவி விமலநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மிமலாதேவி
தந்தை கணபதிப்பிள்ளை
தாய் சின்னம்மா
பிறப்பு 1962.08.02
இறப்பு --
ஊர் கப்புது
வகை அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மிமலாதேவி விமலநாதன் (1962.08.02- ) வடமராட்சி கப்புது என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கணபதிப்பிள்ளை தாயார் சின்னம்மா ஆவார். இவர் தனது ஆரம்பக் கல்வியை யா/ கப்புதூ ஏகாம்பர வித் தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யா/ வதிரி திரு இருதயக் கல்லூரியிலும் பின்னர் யா/ நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றார். கல்வியில் அதிக ஈடுபாடும் திறமையும் கொண்ட இவர் தனது உயர்தரக் கல்வியை யா/ யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் பெற்றார். கல்லூரி விடுதியில் தங்கியிருந்து இவர் கல்வி பயின்றார். பின்னர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவாகி அங்கு சென்று புவியியலை சிறப்புப் பாட மாகக் கற்றார். 1982 - 1986 காலப் பகுதியில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக்கொண்டார். 1988 1989 காலப் பகுதி யில் புவியியல் துறையில் கட்டுரை ஆசிரியராக (Tuitor) பணியாற்றினார். பின்னர்1989ஆம் ஆண்டு ஆசிரியர் நியமனத்தினை பெற்றுக் கொண்டார்.கிளி/ வட்டக்கச்சி மகா வித்தியாலத்தில் தனது ஆசிரியர் பணியினைத் தொடர்ந்தார். 1995 ஆம் ஆண்டு கிளிநொச்சி திருவையாறு மகாவித்தியாலயத்தில் கல்வியினை கற்பித்தார். நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலையில் 1996 ஆம் ஆண்டு வவுனியா இடம்பெயர்ந்து வவுனியா மாவட்டத்தில் உள்ள 1997 வவு/இறம்பைக் குளம் மகா வித்தியாலயத்தில் 6மாத காலம் ஆசிரியராக கடமை புரிந்தார். இந்த கடமை பல்வேறு விதமான செயற்பாடுகளை செய்த்தன் அடிப்படையில் அதிபருடைய பாராட்டுக்களை விசேடமாக பெற்றுக் கொண்டார். 1997ஆம் ஆண்டு திருகோணமலை சாம்பல் தீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் சேவையினை புரிந்தார். 1998ஆம் ஆண்டும் திருகோணமலை உவர்மலை மகாவித்தியாலத்திலும் கல்வியினை கற்பித்தார். கல்லூரியில் ஆசிரியராக செயற்பட்ட காலத்தில் புவியியல் பாடத்தை மாணவர்க ளுக்கு திறம்பட கற் பித்து மாணவர்கள் புவியியல் பாடத்தில் 100% சித்தி பெற காரணமாக இருந் தமை குறிப்பிடத்தக்கது. அவர்கள் 08-02-1989 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் சகபாடியாக கல்வி கற்ற கந்தசாமி விமலநாதன் அவர்களுடன் இல்லற பந்தத்தில் இணைந்து கொண்டார். பாடத்துறைக்கு அப்பால் இவர் பல்வேறு செயற்பாடுகளை சிறப்பாக இணை பாட செயற்பாடு களை முன்னெடுத்து வந்தவர். இல்லப் பொறுப்பாசிரியர், உயர்தரமாணவர் மன்றப் பொறுப்பாசிரியர் பதவிகளை ஏற்று மாணவருக்கு முன் உதாரணமாக நல் வழிகாட்டியாக செயற்பட்டவர். அதிபர் உள்ளிட்ட பாடசாலை முகாமைத்துவ குழுவுடன் இணைந்தும், உயர் தர மாணவர் மன்றம், கலை நிகழ்வுகள், நாடகப் போட்டிகள் என பல நிகழ்வுகளை தன் கணவருடன் இணைந்தும் மேடையேற்றியமை இவரது ஆளுமையின் மற்றொரு பரிமாணம் எனலாம் வவு/ இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் பணியாற்றிய காலத்தில் இல்லங்களுக்கு இடையேயான உடற்பயிற்சிப் போட்டியில் மூன்று வயதுப் பிரிவினரை சம காலத்தில் பயிற்றுவித்து போட்டியிட வைத்தமை அம்மையாரின் விளையாட்டு நிகழ்விலும் சளைக்காத அவரின் ஆற்றலை பறைசாற்றி நிற்கின்றது. அக்காலத்தில் கல்லூரியின் அதிபராக இருந்த அருட்சகோதரி மருத்தீன் அவர்க ளால் சிறந்த ஆசிரியர் என்ற பாராட்டையும் அம்மையார் அவர்கள் பெற்றிருந்தமை குறிப் பிடத்தக்கது. தி/ சாம்பல்தீவு மகா வித்தியாலயத்தில் பல காலம் நடைபெறாது இருந்த விளையாட்டுப் போட்டியை பூரணமாக நடத்தியதோடு உயர்தர மாணவர் மன்ற ஒன்று கூடலையும் சிறப்பாக நடத்தி வந்து அவர்கள் பாராட்டுப் பெற்றமை அவரது ஆசி ரியப் பயணத்தின் சாதனைத் தடங்கள் எனலாம். 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து 01-01-2002 ஆம் ஆண்டு உவர்மலை விவேகானந்த கல்லூரியில் பிரதி அதிபராக இணைந்து கொண்டார். பின்னர் 2005 ஆம் ஆண்டு யா / நல்லூர் தெற்கு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் அதிபராக இணைந்தார். இக் காலத்தில் சிந்துஜன் என்றபுத்திரனை பெற்ற காலமாகும். தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு யா/ சன்மார்க்க மகாவித்தியாலயத்தில் கடமையாற்றி. 2012 ஆம் ஆண்டு முதல் யா/ யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் தனது அதிபர் சேவையையினை நிறைவாக ஆற்றி வருகின்றார். யா/யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி வரலாற்றில் இந்து மகளிர் அன்னை பெற்றெடுத்த "முத்து" அதிபர் திருமதி. மிமலாதேவி விமலநாதன் என்று கூறலாம். காரணம் கல்லூரியின் வளர்ச்சியை பன்மடங்காக்கினார். பாடத் துறை அதற்கு அப்பால் விளையாட்டு உள்ளிட்ட இணைப்பாட செயற்பாடுகள் அனைத்திலும் மாணவர்கள் தேசிய மட்ட சாதனைகளை நிகழ்த்துவதற்கு காரணம் அம்மையார் அவர்கள் கொடுத்த ஊக்கமும் நெறிப்படுத்தலும் என்றால் யாராலும் மறக்கமுடியாது. பாடசாலைச் சூழலை கவின் நிலையாக்கிய தோடு மாணவர்களின் ஒழுக்கம், ஒழுங்கு என்ப வற்றில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர். "பெண் தலைமைத்துவத்திற்கு" சிறந்த ஒரு முன் மாதிரிப் பெண்மணியாக தனது நடைஉடை, பாவனையில் செயற்பட்டவர். தமிழ்ப் பண்பாடு. இறை பக்தி. நல் ஒழுக்கம், இங்கிதமான உரையாடல் பாங்கு. மனங்களை காயப்படுத்தாத பண்பு கொண்ட செயற்பாடு என அனைத்திற்கும் முன்மாதிரியாகச் செயற்பட்ட அதிபராவார். விளையாட்டு நிகழ்வுகளிலும், தமிழ்த்தின நிகழ்வுகளிலும் ஆங்கில தின நிகழ்வு களிலும் ஏனைய போட்டிகளிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக தேசிய மட்ட சாதனையை நிலைநாட்ட முன்னின்று உழைத்தவர். 2015 ஆம் ஆண்டு அவரது வினைத்திறனான செயற்பாடுகள் நோக்கப்பட்டு "பிரதீபா பிரபா விருது பெற்றமை அவருக்கும் பாடசாலைக்கும் கிடைத்த சிறப்பு எனலாம். 2019 ஆம் ஆண்டு மாகாணத்தால் அதே விருது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் எந்த விழாவாயினும் அம்மையார் அவர்களின் ஒத்திகைபாராது அரங்கேறாது. ஒவ்வொரு செயற்பாட்டையும் கலைநயத்தோடு நுணுகி ஆராய்ந்து செயற்படுத்துவார். கலா ரசிகையாக அவர் பங்கெடுப்பது இக் கல்லூரி பெற்ற வரம் எனலாம். முகாமைத்துவநிலையில் வினைத்திறன் மிக்க ஒருவராக பல்வேறு முகாமைத் துவ தந்திரோபாயங்களை நேர்மனப்பாங்கு முறையில் செயற்படுத்துபவர். ஏனையவர்களுக்கு வியப்பாகவும், அறிய வேண்டியவையாகவும் அவரது முகாமைத்துவ நுட்பங்கள் பரிணமிக் கும். நடுத்தோட்ட விநாயகரை நாளும் வணங்கும் அம்மையாரின் பக்தி கல்லூரிச் சமூகத்தையே மெய் மறக்கவைக்கும். கோவில் பூசைகள் விசேட வழிபாடுகளுக்கு முக் கியம் கொடுத்து செயற்படுத்துபவர். இவரது செயற்பாடுகளுக்கு இவரது கணவர் விமலநாதனும் தோள் கொடுத்து, கரம் கொடுத்து பக்க துணையாக இருந்து வந்துள்ளார். கல்லூரி பாடத்துறையில் 100% அடைவைப் பெற அரும்பணி ஆற்றியவர். மேலதிக வகுப்புக்கள், விசேட செயற்றிட்டங்கள். கல்விச் சுற்றுலாக்கள் என அனைத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கி அடைவு மட்டத்தை உயர்தியவர். அத்தோடு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தி கல்லூரி வரலாற்றில் சாதனைத் தளங்களை உருவாக்கியவர். இவர் பாடசாலையில் பௌதீக வளத்தினை பல்வேறு வழிகளிலும் மேம்படுத்தி உள்ளார். பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியுடனும் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடனும் அரசின்நிதியுதவியுடன் பல்வேறு செயற்றிட்டங்களை செவ்வனே நிறை வேற்றியுள்ளார். இவரின் காலப்பகுதிக்குள் மகிந்தோதய ஆய்வுகூடம் (2015) U.S.A Block, பவளவிழா மண்டபம் (2017) போன்றன உருப்பெற்றன. மேலும் ஆசிரியர்களினதும், மாணவர்களினதும் கழிப்பறைகள் (Bath rooms) புதிதாக உருவாக்கப்பட்டும். இருந்தவை சீர்செய்யப்பட்டும் உள்ளன. அத்தோடு ஆசிரியர் ஓய்வறை திருத்தம் செய்யப்பட்டு Tiles போடப்பட்டு கவின்நிலையாக்கப்பட்டுள்ளது. இவர் பாடசாலையைப் பொறுப்பேற்ற போது பெரும்பாலான வகுப்புக்கள் மின்சார வசதி அற்றுக்காணப்பட்டன. இந்நிலையில் அனைத்து வகுப்புகளிற்குமான மின்சார வசதி செய்யப்பட்டதோடுகாலத்துக்கு காலம்அவை சீர் செய்யப்பட்டும் வந்துள்ளன. பாடசாலையின் முகப்பு வாயில் Double gate போடப்பட்டு கவின் நிலையாக்கப் பட்டது. மேலும் அருகில் சிறிய Gate போடப்பட்டு முகப்பு வாயிலை அலங்கரித்துள்ளார். மாணவர்கள் மழை காலங்களில் சேற்றுப்பாதைகளை கடந்து வகுப்பறைக்குள் செல்வதை தவிர்க்கும் முகமாக பாதைகள் கொங்கிறீட் பாதைகளாக மாற்றப்பட்டன. மேலும் உள்ளக வீதிகள், ஆசிரியர் வள நிலையத்திற்குச் செல்வதற்கான பாதை என்பன அமைக் கப்பட்டு வகுப்பறைச் சூழல் உள்ளிட்ட பாடசாலைச் சூழல் தூய்மையாக்கப்பட்டது. தரம் 11 வகுப்பறைகள் முழுமையாக திருத்தப்பட்டதோடு விடுதி மண்டபத்திற்கு நிலம் போடப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி A/L வகுப்புக்கள், தரம் 8,10 ஆம் வகுப்புக்களுக்கும் நிலம் போடப்பட்டு வகுப்பறைகளை ஒழுங்குபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். கற்றல் - கற்பித்தலை வள மூட்டும் வகையில் பௌதீக நிலையை தமது அதிபர் பதவிக் காலத்திற்குள் செவ்வனே மாற்றினார். அந்த வகையில் விசாலாட்சி மண்டபத்தின் நிலம் Teraso போடப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டது. அத்தோடு அதிபர் அலுவலகம் 2015 ஆம் ஆண்டு முழுமையாக திருத்தம் செய்யப்பட்டது. உள்ளக அமைப்பு சிறப்பான முறையில் காட்சிப்படுத்தல்கள், கண் காணிப்புக்களுக்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைத்தல் சிறப்பான முகாமைத்துவ உபாயம் என்று கூடக் கூறலாம். இவரின் காலத்தில் Technology Stream ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு பிரதான மண்டபத்தில் அமர்வதற்கு வசதியாக 1000 பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு மதில் சுவருக்கு பச்சை வர்ணம் தீட்டப்பட்டு பாடசாலைச் சுவர்கள் கவின் நிலையாக்கப்பட்டதைக் காணலாம். மாணவர்களின் தளபாடங்கள் இலக்கம் போடப்பட்டு paint பண்ணப்பட்டன. அத்தோடு 2018ஆம் ஆண்டு அழகியல் கூடம் முழுமையாக புனரமைக்கப்பட்டது, அத் தோடு மாடிப்படிகளுக்கு கதவுகள் போடப்பட்டு முழுமையாக வகுப்பறைச் சூழுல் பகுதிகள் புனர மைக்கப்பட்டன. இவர் கற்றல் கற்பித்தல் பணிகளை செவ்வனே நிறைவேற்ற வழிசமைத்ததோடு கற்றல் கற்பித்தலை வளமாக்கும் வகையில் பௌதீக வளத்திலும் மிகக்கவனம் செலுத்தி கல்லூரியின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவர்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நிறை வான சேவையினை இக் கல்லூரிக்கு வழங்கி உள்ளார். இக் கல்லூரியை எவ்விதம் முன்னேற்றி ஒரு உயர்ந்த பாட சாலையாக மாற்ற விரும்பினாரோ அனைத்தும் பூரண மாக நிறைவேற்றிய திருப்தி பெற்றுள்ளார். தேசிய பாடசாலையாக இக்கல்லூரியை உயர்த்த வேண்டும் என்ற உயர் நோக்கோடு பெரும் பணி புரிந்தார். அப்பணியும் நிறை வேறி தேசிய பாடசாலையாக தர முயர்த்தப்பட்ட பாடசாலைகளில் ஒன்றாக யாழ் மாவட் டத்தில் இக் கல்லூரியும் திகழ்கின்றமை அவரது ஒரு கல்விப் பாதையின் சாதனைத் தடம் எனலாம்.