பேச்சு:தான்பிரீன் தொடரும் பயணம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நூல்விபரம்

அயர்லாந்து விடுதலைப் போராட்டம் பிரித்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து 750 ஆண்டுகளாகத் தொடர்கின்றது. 1916-1948 காலப்பகுதியில் சிறப்பினைப்பெற்ற தலைவர்கள் ஆர்தர் கிரிபித், மைக்கல் கொலின்ஸ், டி வலெரா பொன்றோருக்கு இணையாகக் குறிப்பிடத் தகுந்த ஒரு போராளியான தான்பிரீன் அவர்களின் வீரம் செறிந்த போராட்ட வரலாறு இந்நூல்.


பதிப்பு விபரம்
தான்பிரீன்-தொடரும் பயணம். ப.ராமஸ்வாமி. யாழ்ப்பாணம்:மறுமலர்ச்சிக் கழகம், யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1985. (யாழ்ப்பாணம்: அச்சகம் குறிப்பிடப்படவில்லை) 8 + 158 பக்கம். விலை: ரூபா 12. அளவு: 21 * 14 சமீ,


-நூல் தேட்டம் (169)