பகுப்பு:விதுராவ
நூலகம் இல் இருந்து
விதுராவ இதழானது கொழும்பினைக் களமாகக் கொண்டு 1975 ஆம் ஆண்டு முதல் வெளியாகியுள்ளது. இதுவொரு இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்தின் செய்தித்திரட்டு ஆகும். முத்திங்கள் ஏடாக வெளிவந்துள்ளது. இதன் பதிப்பாசிரியராக நிமலா அமரசூரியா அவர்கள் காணப்படுகின்றார். இதனை இலங்கை தேசிய விஞ்ஞான மன்றம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக இலங்கையின் குறையூட்டம் சார் சில மருத்துவ மற்றும் பொருளாதாரக் காரணிகள், ஆண் பெண் குழந்தைகளும் புரதங்களும், உணவுப் பொருளின் முக்கியத்துவம், இலங்கையின் பிற கடல் வளங்களை விருத்திசெய்வது பற்றிய சில குறிப்புக்கள், உணவுக் கலப்படம் முதலான விஞ்ஞான துறைசார் சகல விடயங்களும் ஒவ்வொரு இதழ் வெளியீட்டின் போதும், ஒவ்வொரு பிராதன தலைப்பின் கீழ் வெளிவந்துள்ளன.
"விதுராவ" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.