பகுப்பு:விடுதலைக்குரல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விடுதலைக்குரல் இதழானது ஜேர்மனிகைக் களமாகக் கொண்டு 1980 களில் வெளிவந்த இதழாகும். இது அக்கால கட்டத்தில் ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் விடுதைக் களகத்தின் அரசியல் விழிப்பு இதழாகும். இலங்கையில் இடம் பெறும் சர்வாதிகார ஏகாதிபத்தியங்களின் கேடான விளைவுகளை சமூகத்திற்கு தெரிவிக்கும் வண்ணம் வெளியீடு கண்டுள்ளது. உலக ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்புக்குரல் கொடுத்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக ஐக்கிய முன்னணி தொடர்பாக, சிங்கள முற்போக்குச் சக்திகள், வெளிநாட்டுத் தொடர்புகள், இராணுவப்பயிற்சிகள், மக்கள் ஜனநாயகம், சிங்கள மக்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், தமிழீழத்தில் எப்படி சமுதாய மாற்றத்தை ஏற்ப்படுத்துவது? மக்கள் அமைப்புக்கள், பலஸ்தீனிய விடுதலைப் போராட்டம், பெண்களின் விடுதலை, தென்னாபிரிக்க மக்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது போராட்டமும், தமிழீழ விடுதலைப்போராட்டமும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அணுகு முறையும், நவசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவநாணயக்காரவின் கருத்துக்கள், விடுதலை இயக்கங்களின் சமூக விரோத நடவடிக்கைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"விடுதலைக்குரல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.