பகுப்பு:வகவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வகவம் இதழானது கொழும்பைக் களமாகள் கொண்டு 1987 தொடக்கம் அச்சில் வந்த இதழாகக் காணப்படுகின்றது. கலை இலக்கியம் மூலம் தேசிய ஒருமை பாட்டை ஏற்படுத்து வதை நோக்கமாக கொண்டு இவ் இதழ் வெளி வந்தது. இதற்கு முந்தைய 2 இதழ்கள் ரோனியோ வடிவில் வந்து அதன் பின்னரே இவ் இதழ் வெளிவந்துள்ளது. இதனை அச்சிட்டு வெளியிட்டவராக ஶ்ரீதர் பிச்சையப்பா அவர்கள் காணப்படுகின்றார். இப்னு அஸ்மத் இந்த இதழின் ஆசிரியராக இருந்துள்ளார். கவிதைக்கான இலக்கிய வட்டமான வலம்புரி கவிதா இலக்கிய வட்டத்தின் ஆறு வருட உழைப்பின் பலனாக இவ்விதழ்அச்சுவாகனமேறியுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களானது கவிதையை முன்னிலைப்படுத்திய மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகள், இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புக்கள் முதலான விடயங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளது.

"வகவம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வகவம்&oldid=493283" இருந்து மீள்விக்கப்பட்டது