பகுப்பு:மூன்றாவது கண்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மூன்றாவது கண் மட்டக்களப்பினைக் களமாகக் கொண்டு 2002 ஆடி இல் இருந்து இவ்விதழானது வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு உள்ளூர் அறிவு செயற்பாட்டிதழாகும். இதழின் ஆரம்ப ஆசிரியராக சி.ஜெயசங்கரும் உதவி ஆசிரியர்களாக தி. லளினி, த. மலர்செல்வன் ஆகியோரும் செயற்பட்டனர். இதனை மூன்றாவது கண் உள்ளூர் அறிவு செயற்பாட்டுக் குழு வெளியீடு செய்துள்ளது. எமது உள்ளூர்,அறிவு, திறன், ஆக்கச்செயற்பாடுகளை முன்னெடுத்தல் தொடர்பான விடயம் சம்மந்தமாக கருத்தியல் தெளிவினையும் , செயற்பாட்டு வேகத்தையும் வளர்க்கும் நோக்கில் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக உள்ளூர் சார்ந்த வைத்தியம், சினிமா, தமிழ் பண்பாடு, விளையாட்டு, கவிதை, நேர்காணல், ஓவியங்கள் என பல்சுவை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.

தொடர்புகளுக்கு- கலாநிதி .சி. ஜெயங்கர், 153 A, விமான நிலைய வீதி , 9 குறுக்கு , திருப்பெருந்துறை , மட்டக்களப்பு தொலைபேசி - 0778095587

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மூன்றாவது_கண்&oldid=493320" இருந்து மீள்விக்கப்பட்டது