பகுப்பு:முத்தமிழ் கலசம்
நூலகம் இல் இருந்து
முத்தமிழ் கலசம் சஞ்சிகையானது கொழும்பைக் களமாகக் கொண்டு 2020 முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது இருமாதத்திற்கொருமுறை வெளிவரும் கவிதை இதழாகும். இதன் வெளியீட்டாளராகவும், ஆசிரியராகவும் sithy wafeera அவர்கள் காணப்படுகின்றார். கௌரவ ஆசிரியராக தமிழ் நெஞ்சம் அமின் அவர்கள் காணப்படுகின்றார். இளம் கவிதை படைப்பாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் நோக்குடன் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் ஆக்கங்களாக மரபுக்கவிதைகள், நவீன கவிதைகள், கைக்கூ கவிதைகள், குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
"முத்தமிழ் கலசம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.