பகுப்பு:முதல்வன்
நூலகம் இல் இருந்து
முதல்வன் இதழானது யாழ்ப்பாணம் பருத்தித்துறையினைக் களமாகக் கொண்டு 2012 ஆம் ஆண்டு முதல் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இதன் பிரதம ஆசிரியராக வே. தவச்செல்வம் அவர்களும், துணையாசிரியராக இரா. ஜெயமோகன் அவர்களும் காணப்படுகின்றனர்.இதுவொரு பல்சுவை காலாண்டு இதழாகும். எமது உறவுகளின் கல்வி, கலை, கலாசாப் பண்பாட்டு விழுமியங்களைக் கட்டிக்காகும் நோக்குடனும், வளர்ந்து வரும் இளந்தலைமுறையினரைப் பல வழிகளிலும் ஊக்குவிக்கும் முயற்சியாகவும் இவ்விதழானது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அரசியல், சமூகம், கலை, இலக்கியம், விஞ்ஞானம் முதலான பல விடயங்களும் காணப்படுகின்றன.
"முதல்வன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.