பகுப்பு:முகடு
நூலகம் இல் இருந்து
முகடு இதழ் கொட்டகலையினைக் களமாகக் கொண்டு 2001 நவம்பர், டிசம்பரில் வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு கலை இலக்கிய சஞ்சிகை ஆகும். இதன் ஆசிரியராக கவிஞர் சு. முரளீதரன் விளங்கினார். தேயிலைத் தோட்டத்திலே வாழும் மக்கள் தினசரி சந்திக்கும் அவலங்களை இவ்விதழ் மிகவும் காத்திரமாகப் பேசியுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக இலக்கியம், அரசியல், விமர்சனம், நாட்டாரியல் சிந்தனை, கவிதைகள், சிறுகதைகள், நூல்நோக்கு முதலான பல்துறை சார் ஆக்கங்கள் காணப்படுகின்றன.
"முகடு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.