பகுப்பு:மீட்சி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மீட்சி இதழ் லண்டனைக் களமாகக் கொண்டு 1993 வைகாசி மாதத்தில் இருந்து வெளியானது. தமிழர் தகவல் நடுவதின் மாதாந்த வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இவ்விதழானது பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், பல்துறை அறிஞர்கள், சமூகத்தொண்டர்கள் முதலானோரை உள்ளடக்கிய ஒரு சுயேட்சைக்குழுவின் படைப்பாகும். அந்நிய நாடுகளில் வாழும் தமிழ் பேசும் மக்களினைப் பாதிக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் கூட்டுச்சிந்தனைக்கான களத்தினை வழங்குவதும், பரஸ்பரம் மற்றும் கருத்துப்பரிமாறல்களை ஊக்குவிப்பதும் இதன் பிரதான நோக்கங்களாகக் காணப்பட்டுகின்றன. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அபிவிருத்தி, பொருளாதாரம், அரசியல், சமூகம் , மனித உரிமை, சுகாதாரம், தமிழர் ஸ்தாபனங்கள், மற்றும் அரசு, குடும்ப, சமய, கல்வி ஸ்தாபனங்கள் பற்றிய விடயங்கள் காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மீட்சி&oldid=493339" இருந்து மீள்விக்கப்பட்டது