பகுப்பு:பெண்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'பெண்' இதழானது சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரின் ஓர் வெளியீடாக கிழக்கிலங்கை மட்டக்களப்பிலிருந்து வெளிவருகின்றது. இதழின் வெளியீடானது 1991ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2007ஆம் ஆண்டுவரை காலாண்டு இதழாக வெளிவந்து, தற்போது அரையாண்டு இதழாக வெளிவருகின்றது. இதழின் ஆசிரியை விஜயலட்சுமி சேகர் ஆவார்.

பெண்ணியம் பற்றி பேசுகின்ற தனித்துவமான இதழாக இது அமைந்துள்ளது. குறிப்பாக பெண் எழுத்தாளர்களை மையப்படுத்திய களமாகவும் அமைந்துள்ளது. இதழின் உள்ளடக்கத்தில் கவிதைகள், உளவியல் கட்டுரைகள், சமூகவியல் கட்டுரைகள், அரசியல் கல்வி சமூக பொருளாதாரத்தில் பெண்களின் நிலை பற்றிய ஆய்வுகள் என்பவற்றுடன் சமகாலத்தில் பெண்சமுதாயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றியும் விசேடமாக பேசுகின்றது.

தொடர்புகளுக்கு:- சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், இல-20, டயஸ்வீதி, மட்டக்களப்பு, இலங்கை. T.P:-0094-65-2223297 E-mail:-suriyaw@slt.lk

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பெண்&oldid=183337" இருந்து மீள்விக்கப்பட்டது