பகுப்பு:பயில்நிலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

2004 ஆம் ஆண்டு தொடக்கம் பயில்நிலம் இதழ் கொழும்பு தெஹிவளை இல் இருந்து வெளியாகியது. ஆரம்ப மாத இதழின் ஆசிரியர் குழுவில் பொ. கோபிநாத், இ.திவாகரன், சகாரா , கலீல் க.அபிராமி , தே. அபிலாஷா ஆகியோர் கடமையாற்றி உள்ளனர். சின்னத்திரைகளினாலும், வெண்திரைகளினாலும் உலகைக் கண்டு உவகை கொள்ளும் இளைய சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டுவதற்கான முனைப்புடன் இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. பின்னைய காலங்களில் இதன் வருகைச் சுழற்சிகள் மற்றும் ஆசிரியர் போன்றவற்றில் பின்னைய காலங்களில் மாற்றங்கள் காணப்படுகின்றன. இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை, கட்டுரை, நேர்காணல் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பயில்நிலம்&oldid=493497" இருந்து மீள்விக்கப்பட்டது