பகுப்பு:நீங்களும் எழுதலாம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'நீங்களும் எழுதலாம்' இதழானது இளைய தலைமுறைக் கவிதைப் படைப்பாளிகளை இனங்காட்டுகின்ற முயற்ச்சியாக கிழக்கிலங்கை திருகோணமலையிலிருந்து இருமாத கவிதை இதழாக வெளிவருகின்றது. 2007ஆம் ஆண்டு வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் எஸ்.ஆர் தனபாலசிங்கம்.


இதழின் உள்ளடக்கத்தில் பயில்களம் ஊடாக மாணவர்களது கவிதைகளும், கருத்தாடற் களம் ஊடாக வாசகர் கடிதங்களும், அறிமுகக் குறிப்பு பகுதியூடாக கவிதைத் தொகுதிகள் பற்றிய அறிமுகமும் இடம்பெறுகின்றது. இவற்றோடு கவிதை விமர்சனம், எழுத்தாளர் அறிமுகம், மொழிபெயர்ப்புக் கவிதை என இதன் உள்ளடக்கம் கவிதையை மையமாக கொண்டு விரிந்து செல்கின்றது.

"நீங்களும் எழுதலாம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.