பகுப்பு:நடுகை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நடுகை இதழ் இருமாத கவிதை இதழாக 2004மாசி-பங்குனியில் இருந்து 305, பலாலி வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. கவிதைகள், கவிதைக்கான விமர்சனங்கள், விவாதங்கள், நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகள், தகவல்கள், கவிதை நூலை விமர்சனகள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியர்களாக த.பிரபாகரன், கு.லட்ஸ்மன் விளங்கினார்கள். மூன்று இதழ்களின் வருகையோடு இந்த இதழின் வருகை நின்றது.

2004 இல் ஒரு இதழோடும் 2009 இல் மூன்று இதழ்களோடும் கைவிடப்பட்டிருந்த நடுகையின் வருகை 12 ஆண்டுகளின் பின் அம்பலம் குழுமத்தின் வெளியீடாக கிளிநொச்சியைத் தளமாகக் கொண்டு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"கவிதைக்கான ஒரு காகித விதைப்பு" என்னும் மகுடத்தோடு இல.01, D.10, உருத்திரபுரம், கிளிநொச்சி என்னும் முகவரியிலிருந்து கவிதைக்கான மாத இதழாக 2021.பங்குனியிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ள நடுகை இதழின் ஆசிரியராக உருத்திரபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வி.ஜனகா நீக்கிலாஸ் அவர்கள் செயற்பட்டு வருகிறார்.

"நடுகை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நடுகை&oldid=430904" இருந்து மீள்விக்கப்பட்டது