பகுப்பு:நங்கை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நங்கை இதழ் 80களின் இறுதியில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மாதர் இதழ். இந்த இதழின் ஆசிரியராக சரோஜா சிவச்சந்திரன் அவர்களும், உதவி ஆசிரியராக இரா.பாலச்சந்திரன் அவர்களும் விளங்குகிறார்கள். மகளீர் அபிவிருத்தி நிலைய வெளியீடாக வெளிவரும் இந்த இதழில் பெண்கள் பிரசினைகள், பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள், பெண்களின் முன்னேற்றம், பெண்ணியம் சார் கவிதை கட்டுரைகள், சிறுகதைகள், என்பவற்றுடன் பெண்களுக்கு இழைக்க படும் அநீதி, பாலியல் கொடுமைகள், பெண்கள் அமைப்புகள், உதவி வழங்கும் நிறுவனர் என பல தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது. தொடர்புகளுக்கு: 7 -ரத்னம் றோட், கே.கே. எஸ். வீதி , வண்ணார்பண்ணை யாழ்ப்பாணம்

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:நங்கை&oldid=185941" இருந்து மீள்விக்கப்பட்டது