பகுப்பு:சர்வதேச தமிழர்
சர்வதேச தமிழர் இதழ் தமிழர் முன்னேற்றம், ஐக்கியம் கருதி நோர்வே தமிழர்களுக்காக வெளியீடு செய்யப்பட்டது. 1994இல் இதன் முதல் இதழ் வெளிவந்தது. இது ஒரு செய்தி இதழாகும். இதன் ஆசிரியராக என்.எஸ்.பிரபு என்பவர் காணப்பட்டுள்ளார். அக்காலகட்டத்தில் புலத்தில் வாழ்ந்த தமிழர்களின் அரசியல், சமூகம், கல்வி, பொருளாதாரம், மொழி , மனித உரிமைகள் முதலான தமிழர் தம் நிலைமைகளை வெளிக்கொணரும் நொக்கில் வெளிவந்த செய்தி இதழாக இது காணப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக அறிவுப்போட்டிகள், பிரபல தமிழர் அறிமுகம், உழைப்பால் உயர்ந்தவர் கதை, கல்வியால் உயர்ந்த தமிழர், கலைத்தமிழர், அரசியல் தலைவர், அரியது செய்த தமிழர், தமிழ்த்தொண்டர், தமிழ் விஞ்ஞானி, சூழல் அவலங்கள் முதலான பகுதிகளைக் கொண்ட ஆக்கங்களாகக் காணப்படுகின்றன.
"சர்வதேச தமிழர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.