பகுப்பு:காக்கைச்சிறகினிலே

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

காக்கைச் சிறகினிலே என்னும் இதழ் தமிழ் நாட்டின் சென்னை நகரில் இருந்து வெளிவரும் இலக்கியத் திங்கள் இதழ் ஆகும். இவ்விதழின் முதல் மூன்று இதழ்கள் 2011 ஒக்டோபர், நவம்பர் டிசம்பர் ஆகிய மாதங்களில் மாதிரி இதழ்களாக வெளியிடப்பட்டன. பின்னர் 2012 இல் இருந்து முறையான இதழாக இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவ்விதழிற்கு வி. முத்தையா ஆசிரியராகவும் வெளியிடுபவராகவும் இருக்கிறார். அழகிய பெரியவன், இரா. எட்வின், ச. முகில்நிலா, ச. மேகனா ஆகியோர் ஆசிரியர்குழுவில் ஆரம்ப காலத்தில் இருந்தனர். 2020 ஆணிடில் டிராட்ஸ்கி மருது, க. பஞ்சாங்கம், கே.எம். வேணுகோபால் ஆகியோர் காணப்பட்டனர். அக்குழு அவ்வவ்பொழுது மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இதன் உள்ளடக்கங்களாக நூல் திறனாய்வு, இலக்கியம், நாட்டார் வழக்காறியல், உளவியல், அரசியல், சமூகவியல்,சினிமா, தன் வரலாறு, தொல்லியல் , கவிதை, கட்டுரை முதலான விடயங்கள் காணப்படுகின்றன. தொடர்புக்கு- kaakkaicirakinile@gmail.com

"காக்கைச்சிறகினிலே" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 51 பக்கங்களில் பின்வரும் 51 பக்கங்களும் உள்ளன.