பகுப்பு:இன்கிலாப்
இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் முஸ்லிம் மஜ்லிஸினரால் பல்கலைக்கழகக் கல்வியாண்டில் அடிப்படையில் ஆண்டுக்கொரு முறை வெளிவரும் சிறப்பிதழாகும். இது 1977 ஆம் ஆண்டில் I.L.A. Jabbar என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரத்தொடங்கியுள்ளது. பின்னைய கால இதழ்கள் ஒவ்வொன்றிக்கும் தனித்தனி இதழ் வெளியீட்டுக்குழு செயற்பட்டுள்ளது. தொடர்ந்து இது பல்வேறு காரணங்களினால்1983 - 1987 வரையான காலப்பகுதிகளில் இடைநிறுத்தப் பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு அன்றைய துணைவேந்தர் பேராசிரியர் .சு. வித்தியானந்தன் அவர்களின் உந்துதலுடன் M.H.M.Ali Sabri என்பவரை ஆசிரியராகக் கொண்டு 5 ஆவது இதழ் வெளிவந்த போதும் அதுவே இறுதியான இதழாகவும் காணப்பட்டுள்ளது. பின்னர் பல வருடங்கள் கழித்து 2015 ஆம் ஆண்டு இதன் 6 ஆவது இதழானது ஆசிரியர் குழமமின் பல பிரயத்தனங்களுக்குப் பின்னர் பிரதி கண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இற்றை வரைக்கும் ஒவ்வொரு மஸ்லிஸ் நிர்வாக ஆண்டுக்கும் இவ்விதழானது வெளிவந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விதழானது இலங்கை வாழ் முஸ்லிம் சமூகங்கத்தின் சமூக, கலை, இலக்கிய, வரலாற்று, மரபுசார், அரசியல் விடயங்களைப் பெருவாரியாகத் தாங்கிவருவதோடு ஏனைய சமுகங்களின், எழுத்தாளர்களின் படைப்புக்களையும் உள்ளடக்கங்களாகக் கொண்டுள்ளது. தொடர்புகளுக்கு- முஸ்லிம் மஜ்லிஸ் , யாப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை, Email- mmuoj@gmail.com
"இன்கிலாப்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.