பகுப்பு:அகதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

அகதி என்னும் பெயர் கொண்ட இவ்விதழானது ஒரு காலாண்டு இதழாக இலங்கையில் வெளிவந்துள்ளது. 1990 காலப்பகுதிகளில் போர் நடவடிக்கையினால் வடக்கில் இருந்து பலவந்தமாகத் துரத்தப்பட்டமுஸ்லிம்கள் ஏனைய மாவட்டங்களில் அகதிகளாக குடியமர்ந்த போது , அவர்களின் குரலாகவே குறித்த இவ்விதழானது வெளிவந்து இருக்கின்றது. இதனை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்புபே வெளியிட்டுள்ளது. 1993- 1998 வரையான காலப்பகுதிகளில் மொத்தம்12 இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவற்றுள் காணப்பட்ட உள்ளடக்கங்களாக தமது சொந்தஇடங்களில் இருந்து துரத்தப் பட்டு அகதியாக்கப்பட்டவர்களின் அகதி வாழ்வு, அதுசார் பிரச்சினைகள், உளக்குமுறல்கள்,அனுபவப்பகிர்வுகள், எதிர்பார்ப்புக்கள், நீதி கோரல்கள் முதலியன கட்டுரைகள், கவிதைகள் மற்றும் அனுபவக்குறிபுக்களாக வெளியிடப்பட்டுள்ளன. இவை அம்மக்களின் இருப்பிடம் விட்டு துரத்தியடிக்கப் பட்ட வலிகளாக, அங்கலாய்ப்புக்களாகக் காணப்படுகின்றன.1994 ஆம் ஆண்டு ஒரு ஆண்டுச்சிறப்பிதழும் வெளியிடப்பட்டுள்ளது.

"அகதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:அகதி&oldid=458089" இருந்து மீள்விக்கப்பட்டது