நூலகம் பேச்சு:பகுப்பாக்கம் அறிமுகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஷசீவன்,

பகுப்பாக்கத்துக்கம் பற்றிய விளக்கத்துக்கென தனிப்பக்கம் உருவாக்கப்பட்டுள்ளமையும், பகுப்பாக்கத்தின் தேவை பற்றிய உங்கள் கரிசனையும் வரவேற்கத்தக்கது.

பகுப்பாக்கம் தொடர்பான உரையாடல்களுக்கு நாம் இந்தப்பக்கத்தைப் பயன்படுத்தலாம்.

--மு.மயூரன் 20:02, 30 ஆகஸ்ட் 2008 (UTC)

நூலகப்பகுப்பு: என்ற தனிப்பெயர்வெளி உருவாக்க வேண்டி வருமோ என்ற எனது எண்ணம் தவறானது. உண்மையில் தாய்ப்பகுப்பின் கீழேயே நூலகப்பகுப்பு அல்லது பகுப்பாக்கம் என்ற பெயரில் ஒரு பகுப்பினை உருவாக்கி அதன் கீழ் தூயிப்பகுப்பு முறையை ஒழுங்குபடுத்த முடியும். ஆனால் தாய்ப்பகுப்பின் கீழ் வரும் பகுப்புக்களை நாம் மிகத்தெளிவாக வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு மேல்நிலைப்பகுப்பின் கீழ் வரும் துணைப்பகுப்புக்கள் கொண்டிருக்கும் புத்தகங்களையும் பகுப்புப்பக்கத்தில் பட்டியலிடத்தக்க நீட்சிகள், மாற்றங்கள் எதனையும் மீடியாவிக்கியில் சேர்க்க முடியுமா என்பது பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

நான் விளங்கிக்கொண்ட வரை தாய்ப்பகுப்பின் கீழ்,

  • ஆவணவகை
    • நூல்கள்
    • இதழ்கள்
    • பிரசுரங்கள்
    • etc


  • பகுப்பாக்கம்
    • தூயி 100
    • தூயி 200
    • தூயி 300
    • etc


  • ஆவணவிபரம்
    • நூலாசிரியர்
    • இதழாசிரியர்
    • வெளியீட்டு ஆண்டு
    • பதிப்பகங்கள்
    • etc

என்றவாறு பகுப்புக்கள் வரவேண்டும்.

இந்த முன்மொழிவு தொடர்பாக உங்கள் கருத்துக்களை கூறவும்.

--மு.மயூரன் 20:10, 30 ஆகஸ்ட் 2008 (UTC)

பகுப்பாக்கமும், தேடு பொறியும் ..

நூலகத்தில் பின்பற்றப்படும் பகுப்பாக்கம், நூலகப் பணியாளர் நூல்களை உடன் கண்டறிந்து, பயனருக்குத் தர ஏற்படுத்தப்பட்டது. நூலகத்தில் நூலகப்பணியாளரே, தேடுபொறி. நூலகப்பணியாளருக்கு இங்கு விவரிக்கப்பட்ட, தூயிப்பகுப்புமுறை(Dewey Decimal Classification) போன்ற பகுப்பு முறைகள் அவசியமானது. அடிப்படையானது ஆகும்.

இவ்விணையத்தள நூலகத்தில், தேடுபொறி இருக்கும் போது, நூலகப்பணியாளருக்காகப் பின்பற்றப்படும் பகுப்பு முறைகள் அவசியமா? ஒரு நூலைத் தேடுவோருக்கு, தேடுபொறியே நல்ல பலனைத் தருமல்லவா? இதைப் பற்றி அறிய ஆவல்.த*உழவன் 11:52, 2 ஏப்ரல் 2010 (UTC)