நிறுவனம்: யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் யாழ்ப்பாணம்
பெயர் | யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் யாழ்ப்பாணம் |
வகை | பழைய மாணவிகள் சங்கம் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | - |
முகவரி | - |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவி சங்கம் 1947 ஆம் ஆண்டு அதிபர் திருமதி கிளேரா மொட்வாணி அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட் டது. இச் சங்கத்தின்' குழுவினராக பின் வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: திருமதி கிளேரா மொட்வாணி உபதலைவர்: செல்வி ஜீ. இராசையா செயலர்: செல்வி தை. தம்பு பொருளர்: செல்வி எஸ். கார்த்திகேசு
1947 ஆம் ஆண்டு இச்சங்கத்தின் 1வது ஒன்றுகூடல் ஆவணி மாதம் 1ஆம் திகதி நடைபெற்றது. இவ்வொன்றுகூடலில் கல்லூரியின் ஸ்தாபக நாள் கொண்டாடுவது பற்றியும் கல்லூரிக்கு கொடி ஒன்று அன்பளிப்புச் செய்யவும் தீர்மானம் எடுக்கப் பட்டது. 1948 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 10 ஆம் திகதி. ஸ்தாபக தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு கொடி ஒன்றும் அன்பளிப்புச் செய்யப் பட்டது. செல்வி இ. சகிப் ஓர் சொற் பொழிவும் ஆற்றினார். அன்று தொட்டு பழைய மாணவர் சங்கம் ஆண்டுதோறும் ஒன்றுகூடல் வைப் வத்தை நடாத்துவதுடன் கல்லூரியின் செயற்பாடுகளில் உதவியும் வருகிறது. அன்றைய கால கட்டத்தில் பெற்றோர். ஆசிரியர் சங்கம் இருக்கவில்லை எனவே எல்லாத் தேவைகளையும் அதிபர்,ஆசிரியர், பழைய மாணவர் ஆகியோரே கவனித்து வந்தனர். எமது கல்லூரி இக்குறுகிய காலகட் டத்தில் இவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந் தமைக்கு முன்னைய மாணவர்கள் கல்வி, விளையாட்டு, கவின்கலை ஆகியவற்றில் அவர்கள் காட்டிய ஆர்வமும் முயற்சியும், ஆசிரிய பெருந்தகையினரின் விடா முயற் சியும் அக்கறையுமே காரணமாகும். கல்லூரி மேன்மேலும் வளர்ச்சி அடைய வேண்டுமானால் அதில் பழைய மாணவரின் பங்கு கூடிய அளவில் செயற் படுவதற்கு எமது சங்கத்தின் தலைவர் ஓர் பழைய மாணவராக இருக்கவேண்டும் என்று ஓர் வேண்டுகோள் 1992ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது பிரஸ்தாபிக் ப்பட்டு பின்னர் ஏகமனதாக சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து செல்வி புஷ்பா செல்வநாயகம் அவர்கள் முதல் தலைவராக பதவி யேற்றார். பின்வருவோர் நிர்வாக சபை ` அங்கத்தவர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
உபதலைவர்: திருமதி இ. சண்முகம் செயலர்: திருமதி ம.பரமநாதன் துணைச்செயலர்: செல்வி ஜெ. சரவணபவ-ஐயர் பொருளர்: செல்வி யோ. கந்தையா துணைப்பொருளர்: திருமதி தி. யோகநாதன்
இத்தகைய மாற்றம் ஏற்பட்டதனால் பழைய'மாணவ சங்க நிர்வாகக்குழு அங்கத்தினர் மிகவும் உற்சாகத்துடன் செயற்பட்டு உலகளாவியலகளாவிய ரீதியில் எமது பழைய மாணவர்களிடமிருந்து எமது கல்லூரிக்குத் தேவையான உதவியைப் பெற முயன் றுள்ளனர். எமது பழைய மாணவர் கனடாவில் ஓர் கிளை ஒன்றினை ஸ்தாபித் துள்ளனர். அதே போன்று கொழும்பிலும் அவுஸ்திரேலியாவிலும் கிளைகளை ஸ்தா பிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம். பொன்விழாவைக் கொண்டாடி வரும் இவ்வேளையில் எமது பழைய மாணவர்கள் என்றும் இல்லாத வகையில் ஒன்று திரண்டு பல வைபவங்களில், ஆர்வத்துடனும், ஊக்கத்துடனும் பங்கு பற்றி வருவது கல்லூரியின் வளர்ச்சிக்குப் பெரிதும் வேண்டப்படுவது ஒன்றாகும். அண்மைக்காலங்களில் எமது மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக விஞ்ஞானம், மருத்துவம். வர்த்தகம், கலைத்துறைகளில் முன்னணியில் தேறி வருவதுடன் புலமைப்பரிசில்களையும் பெற்று வெளிநாடுகளில் மேற்படிப்பை மேற்கொண்டு வருவது எமது கல்லூரிக்கு பெருமையைத் தருகின்றது. இவர்கள் தாம் தமக்குப் பெருமைதேடிக் கொள்ளுவதுடன் கல்லூரிக்கும் பெருமை யைத் தேடிக் கொடுக்கின்றனர். இவர்கள் தமது தகைமையை மறவாது தம்மால் இயன்ற உதவிகளையும் வழங்கி, தமது கல்லூரியின் வளர்ச்சிக்கும் உழைக்க வேண்டும். என வேண்டுகின்றோம்.
பழைய மாணவர் சங்கம் தலைவர் செல்வி பு. செல்வநாயகம் உபதலைவர் திருமதி இ. சண்முகம் செயலர் ம. பரமநாதன் உபசெயலர்- ஜெ. சரவணபவஐயர் பொருளர்- செல்வி யோ. கந்தையா இணைப்பொருளர்: திருமதி தி. யோகநாதன்