நிறுவனம்: யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் கனடா
பெயர் | யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் கனடா |
வகை | பாடசாலை |
நாடு | கனடா |
மாவட்டம் | |
ஊர் | - |
முகவரி | 20 லேட் அவனியூ |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
யாழ். இந்து மகளிர் கல்லூரியின் வரலாற்றில் 27-09-92 பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நன்நாளாகும் இன்று பொன்விழாப் பொலிவுபெற்றுள்ள கல்லூரிக்கு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் அக்கல்லூரியின் பழைய மாணவிகளால் கனடாவிலுள்ள முன்னாள் லான்ஸ்டவுனில் இருக்கும் 20 லேட் அவனியூவில் உள்ள தமிழர் கூட்டுறவு மண்டபத்தில் அக் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கம் நிறுவப்பட்டது. இதுவே இக் கல்லூரிக்கு முதல் முதலாக வெளிநாடு ஒன்றில் நிறுவப்பட்ட சங்கம் ஆகும். தூரம் அன்பைப் பெருகச் செய்யும் என்ற கூற்றுக்கு இணங்கக் கல் லூரியின் பழைய மாணவிகள் மிகவும் குதூகலமாக வைபவத்தில் கலந்து கொண்டனர். இச்சங்கத்தை கல்லூரியின் சிரேஷ்ட மாணவிகளில் உப பொருளர் ஒருவரான திருமதி தெய்வநாயகி சிவசோதி மங்களதீபத்தை ஏற்றிவைக்க இறைவழிபாட்டுடனும், கல்லூரிக் கீதத்துடனும் கூட்டம் ஆரம்பித்தது. பின் இரு நிமிடங்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கு அரியசேவைஆற்றி அண்மையில் மறைந்த அதிபர் செல்வி. பத்மா இராமநாதனுக்கும், கல்லூரியின் வளர்ச்சிக்கு நற்பணியாற்றி மறைந்த ஆசிரியைகள் திருமதி. ம. முத்துத்தம்பி, திருமதி. எஸ். ஆறுமுகம், திருமதி. சொ. பத்மநாபஐயர், திருமதி. ப. ஜெகநாதன், திருமதி.ச. கனகசபாபதி, திருமதி. எஸ். இராச ரெத்தினம் ஆகியோருக்கும் மறைந்த கல்லூரியின் மாணவிகளுக்கும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து இக்கூட்டத்தை ஒழுங்கு செய்தவரினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. பின் மாணவிகள் ஒவ்வொருவரும் தம்மை அறிமுகப்படுத்தி தாங்கள் படித்த காலத்தையும் ஞாபகப் படுத்தினர். சங்கத்தின் கனடா பின்பு பழைய மாணவிகள் கிளையின் உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர்: திருமதி தெய்வநாயகி, உப தலைவர்: கமலா திருநாவுக்கரசு ,செயலர்: செல்வி நல்லம்மா குழந்தைவேலு, பொருளர்: திருமதி றாஜி கதிர்காமநாதன், உப பொருளர்: கோமதி கமலவாசன்.
நிர்வாகக் குழுவினர்திருமதி இதயகுமாரி பாலசிங்கம், சந்திரிகா சிவக்குமார் , ரஞ்சினி செல்வராசா, விமலா விஜயகுமார், சதா சாண், செல்வி ஊர்மிளா சிவசோதி, உமாகாந்தி கணபதிப்பிள்ளை , வைதேகி தர்மரத்தினம் பிரபாளினி செல்லத்துரை, வாசுகி சொமசுந்தாம், பாலவிஜயை பாலசிங்கம், தொடர்ந்து யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் தலைவி செல்வி பு. செல்வநாயகம், செயலர் திருமதி ம. பரமநாதன் ஆகிய இருவரினாலும் பொன்விழா பற்றியும், நிதியுதவி கோரியும் அனுப்பப்பட்ட பிரதிகள் மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. பொன்விழாவை 10-09-1993 இல் கனடாவிலும் கொண்டாட வேண்டும் என்றும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டன. விழா வினை எவ்வாறு கொண்டாடுவது என்றும் ஆலோசனைகள் வழங்கினர். இறுதியாக தேநீர் விருந்து இடம்பெற்றது. மண்டபவாடகை, பத்திரிகை விளம்பரம், அழைப்பிதழ் மடல்கள் அச்சிடுதல், தேநீர்ச் செலவு ஆகிய பழைய மாணவிகளினாலேயே இலவசமாகச் செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரிய விடயமாகும். கனடாவில் நிகழும் பொருளாதார மந்தநிலை சீர்ப்பட்டதும் கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான உதவி செய்யவேண்டுமென மாணவிகளால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.