நிறுவனம்: யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி நடுத்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையார் கோயில் வரலாறு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி நடுத்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையார் கோயில் வரலாறு
வகை -
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முதற் தமிழ் தலைமை ஆசிரியராய் இருந்து பின் யாழ்ப்பாணத்தில் முடிக்குரிய நியாயதுரந் தரராய் இருந்த வண்ணார்பண்ணை அம் பிகைபாகன் சின்னத்தம்பியின் (Brown Sinnathamby) மூத்த புதல்வரும், ஊர் காவற்றுறை ரேகுத்துரையும் நீதிவானு மாய் இருந்தவர் இராமலிங்கம் என்பவர். இவர் கச்சாய் புகழ்பூத்த குடும்பமான இராஜவரோதய முதலியாரின் குடும்பத்தில் உதித்த தங்கமுத்து என்பவரைத் திரும ணஞ் செய்தார். இராமலிங்கம் சைவசமய வளர்ச்சியில் பெரும் ஈடுபாடுடையவராய் இருந்தமையால் அவரது மனைவியார் தமது பிறந்தகத்தில் இருந்து கொணர்ந்த ஒரு பிள்ளையார் விக்கிரகத்தைத் தமது பூர் வீகச் சொத்தான ‘பூனை தூக்கிப் பிரயாடி' (நடுத்தோட்டம்) என்னும் காணியில் பிர. திஷ்டை செய்து ஒரு சிறிய மண்டபமும் கட்டுவித்தார். இக்கோயில் தான் இன்றும் இராஜவரோதயப் பிள்ளையார் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இராமலிங்கம் சிவபதம் அடைந்த பின் அவரது புதல்வர்களான சிவசுப்பிரமணிய மும் சிவகுருநாதரும் இக் கோவிலின் நித் திய நைமித்திய பூசைகளைச் செவ்வனே நடத்தி வந்தார்கள். அவர்கள் இக் கோயி லின் கிழக்கே நீண்டதும் விசாலமான துமான ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டு வித்தனர். சிவசுப்பிரமணியம் தனது உபய மாக ஒரு மணியைச் செய்வித்துக் கொடுத்தார். அம்மணியில் இராஜவரோதயவிக்கினேஸ்வரப் பிள்ளையாருக்கு இ. சிவ சுப்பிரமணியத்தின் உபயம் 1902 என்று பெறித்திருப்பதை இன்றும் காணலாம். இக்கோயில் இராமலிங்கத்தின் குடும்பத்த வர்களின் குடும்பக் கோயிலாக (Private Chapel) இருந்து வந்த போதிலும் இக் கோயிலின் அயலிலுள்ளவர்களும் இங்கு வந்து வழிபாடு செய்தனர். கும்பாபிஷேகம் நடத்தப்படாத காரணததால் இக் கோயிலில் வருடாந்த மஹோற்சவங்கள் நடைபெறவில்லை. ஆனால் ஏனைய திரு நாட்களான சதுர்த்தி, தைப்பொங்கல், வருடப்பிறப்பு, திருவெம்பாவை, நவராத் திரி முதலியன உரிய முறையில் செவ்வனே நடத்தப்பட்டு வந்தன. நவராத்திரி விழா இக் குடும்பத்தினரால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கதாகும். மானம்பூ வாழைவெட்டிற் காக உபயோகிக்கப்பட்டு வரும் எனது பாட்டியின் (இராமலிங்கத்தின் மகள்) வீட்டிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இக்கோவிலின் வெள்ளிப் பித்த ளைப் பாத்திரங்கள் எனது பாட்டனார் லேயே வைக்கப்படும். சிவகுருநாதரும் முறையான சிவசுப்பிரமணியத்தின் வீட்டியே வைக்கப்படும் சிவகுருநாதரும் அவரது மனைவியார் விசாலாட்சி அம்மை யாரும் தமது பணத்திலேயே இக்கோயிலுக்கு மடப்பள்ளி கட்டுவித்துக் கொடுத்த மேற்குப்புறத்தே பூசைக்கு மலர்கள் எடுப்பதற்காக ஒரு நத்த வனமும் அமைத்துக் லுக்கு ஒரு சட்டவிளக்கும் செய்து கொடுத் கொடுத்தனர். அம் அக்கோயில் மூலஸ்தான மூலஸ்தான வாச தார். அச்சட்ட விளக்கு இப்பொழுதும் அவரது பெயரைத் தாங்கிக் கொண்டு இருக்கிறது. இந் நிலப்பகுதி சிவசுப்பிரமணியத்தின் , மகள் வள்ளியம்மாவினால் கல்லூரி அதிகார சபைக்கு நன்கொடையாக இந்து மகளிர் கல்லூரியின் உபயோ கத்திற்காக அளிக்கப்பட்டு பின்னர் மடப்பள்ளி 1960 ஆம் ஆண்டிலிருந்து 1975 ஆம் ஆண்டு வரை இக்கல்லூரியின் கூட்டுறவுக்கடையாக விளங்கியது. அது இப்பொழுது அழிந்துவிட்டது.

திருமதி விசாலாட்சி அம்மா இந்து மகளிர் கல்லூரியை நிறுவுவதற்காக தனது சீதனக் காணியை இந்துக்கல்லூரி நிர்வாக சபைக்கு நன்கொடையாக ஈகை செய்தார் இதனை அடுத்து இராமலிங்கம் சிவகுரு நாதரின் பெறாமகள் வள்ளியம்மாவும் அக்காணிக்கு அருகாமையில் இருக்கும் இக்கோயில் அமைந்துள்ள தனது யைச் சபைக்கு கல்லூரியின் உபயோகத்துக் கென மனமுவந்து கொடுத்தார். நாதர் இக்காணி எழுதும்பொழுது குறித்த நன் கொடையை ஏற்பவர் மீது இரண்டு நிபந்தனைகளை விதித்து இருந்தார்.

1.இக்கல்லூரியின் கோயிற் பூசகராக வண்ணார்பண்ணையில் வாழும் குமார சாமிக்குருக்கள் திரியம்பகக் குருக்கள் (செல்லத்துரைக் குருக்கள்) பரம்பரையில் ஒருவரையே நியமிக்க வேண்டும் எனவும், 2. அவரின் வேதவனம் மாதாந்தம் கல்லூரியின் அதிகாரசபையினால் பொறுப்பேற்கப் படவேண்டும் எனவும் கூறப்பட்டது. இக் கோயிலில் முதலில் பூசை செய்யும் பொறுப்பைப் பெற்றவர் குமாரசுவாமிக் குருக்களின் தாயார் திருவேங்கடம்மா என்று கூறப்படுகிறது. அரசாங்கம் கல்லூரியை பொறுப்பேற்றபின் கோயிலின் நித்திய பூசைகளுக்கு கல்லூரி விடுதிச்சாலையும் பாடசாலை அதிபருமே பொறுப்பாக இருந்தனர். செல்வி ப. இராமநாதன் இக்கல்லூரி அதிபராக இருந்தபோது பழைய மாணவி கள் சங்கத்து உதவியுடன் இக்கோயிலுக்கு புது மெருகூட்டிக் கும்பாபிஷேகம் 1986ஆம் ஆண்டு செய்வித்தார். இப்பொழுது இக்கோயிலின் நித்திய பூசைக்குரிய அரிசி, எண்ணெய் முதலியவற்றைக் கல்லூரி மாணவிகளே வழங்கிக் கோயில் செவ்வனே நடக்க உதவுகின்றனர்.