நிறுவனம்: புவியியல் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புவியியல் மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புவியியல் மன்றமானது இடைநிலை வகுப்புக்களில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களையும் க.பொ.த உயர்தர வகுப்பில் புவியியலை ஒரு பாடமாகக் கற்கின்ற மாணவர்களையும் அங்கத்தவராகக் கொண்டு இம் மன்றம் செயற்படுகின்றது. இம் மன்றத்தின் செயற்பாடுகளில் உதாரணங்கள் சில

இம் மன்றமானது ஒவ்வொரு மாணவியின் அறிவு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையுமே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இம் மன்றத்தினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் மாணவிகளின் அறிவு வளர்ச்சிக்காகப் புவியியல் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மாணவர்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உள்ளடக்கிய கண்காட்சிகளை ஒழுங்கு செய்வதன் மூலமும் , கட்டுரைப் போட்டிகளில் மாணவிகளைப் பங்குபற்ற செய்வதன் மூலமும் மாணவிகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்த இம் மன்றம் முயற்சி செய்து வருகின்றது.

மாணவர்களின் அறிவு, திறன் மனப்பாங்குகளை வளர்க்கும் வகையில் புவியியல் மன்றமானது ஆற்றும் பணிகள் அளவிடற்கரியன.

தலைமைத்துவப் பயிற்சி, சொற்பொழிவாற்றும் திறன், செயலாற்றும் திறன் , ஒத்துழைப்பு ஆகிய பண்புகளை மாணவரிடத்தில் வளர்க்கும் வகையில் இம் மன்றம் செயலாற்றி வந்துள்ளது.

புவியியல் மன்ற அங்கத்தவர்கள் அனைவரும் பங்காற்றக் கூடிய வகையில் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள், பொது அறிவு வினாவிடைப் போட்டிகள் மட்டுமன்றிக் காலத்துக்குக் காலம் மாணவிகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் கண்காட்சிகளையும் நடாத்தி வந்தன..

இயன்றளவு வாண்மைமிகு பெரியார்களின் சிறப்புரைகளையும் இடம்பெறச் செய்து மாணவர்களின் ஆற்றல்களைப் பல்துறைகளிலும் வளம்படுத்தி வருகின்றது.

இம்மன்றமானது சாதகமான சூழ்நிலைகளில் கல்விச்சுற்றுலாக்களையும் மேற்கொண்டு வந்துள்ளது.