நிறுவனம்: புகைப்படக் கலை மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புகைப்படக் கலை மன்றம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை -
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் புகைப்படக் கலை மன்றமானது இம்மன்றமானது புகைப்படக் கலை மீது மாணவர்களின் ஆர்வத்தை ஊக்குவித்தலும், தொழினுட்பம் சார்ந்த கலைகளை வளர்ப்பதுமாகக் காணப்படுகின்றது. இப் புகைப்படக் கலை மன்றத்தின் செயற்பாடுகளில் உதாரணங்கள் சில.

புகைப்படக் கலை மன்றத்தின் முக்கிய நிகழ்வுகள் 04.07.2024 அன்று யா/யாழ் இந்து கல்லூரியில் நடைபெற்ற புகைப்படக் கலை கருத்தரங்கில் எமது கல்லூரியிலிருந்து 10 மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை பெற்றுள்ளனர்.

புகைப்படக் கலை மன்றத்தின் 19.10.2024 கலம் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கண்காட்சியிலும் கருத்தரங்கிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

10.10.2024 உளநல தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வில் எமது மாணவர்கள் குறும்பட ஆக்கம் தயாரித்து முன்வைத்துள்ளனர்.

கல்லூரி நிகழ்வுகளுக்கான புகைப்பட ஆவணமாக்கல் நிகழ்வும் இடம்பெறுகின்றது.

சான்றிதழ் வழங்கல், மாணவர் முதல்வர் தெரிவு, பரிசளிப்பு விழா, தரம் 6 மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு, ஆங்கில தினம், முத்தமிழ் தினம், நவராத்திரி போன்ற பல நிகழ்வுகளும் புகைப்பட ஆவணமாக்கல் செய்து கல்லூரியின் இணையத்தளம் மற்றும் முகநூல் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வரும் காலங்களில் மாணவர்கள் புகைப்படக் கலைப் பயிற்சி முகாம்களில் பங்குபற்றி, நவீன தொழினுட்பம் தொடர்பான அறிவைப் பெற்று தமது திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான முயற்சியும். வழிகாட்டலும் வழங்கப்படும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது.