நிறுவனம்: நீச்சல் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நீச்சல் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை -
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் நீச்சல் கழகமானது 2024 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு தை மாதம் நீச்சல் தொடர்பான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இப்பயிற்சியானது மருதானமடம் வல்லவன் அக்கடமியில் வழங்கப்பட்டு வருகின்றது.

இப்பயிற்சியானது நீச்சல் பயிற்றுவிப்பாளர் திரு. வல்லவன் அவர்களினால் பயிற்றுவிக்கப்படுகின்றது.

இப்பயிற்சிக்கான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை நெறிப்படுத்தும் செயற்பாட்டினை எமது கல்லூரியின் கணித பாட ஆசிரியர் திருமதி. இ. லஷீகா அவர்கள் செயற்பட்டு வருகின்றார்.

அந்த வகையில் 09 மாணவிகள் இப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் 3 மாணவிகள் 2024 ஆம் ஆண்டு கிளிநொச்சி பொது மைதான நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டப் போட்டியில் பங்குபற்றி 9 இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்விடங்களைப் பெற்று வயது அடிப்படையில் இரு மாணவிகள் தேசிய மட்ட நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்கான தகுதியினைப் பெற்றுக் கொண்டனர்.

கொழும்பு சர்வதேச நீச்சல் தடாகத்தில் இடம்பெற்ற தேசிய மட்ட நீச்சல் போட்டியில் JHLC Poize Day 2025 25 கி. கிரிஷாங்கனி 50m backstroke, 100m breaststroke, 100m freestyle ஆகிய விளையாட்டுக்களில் பங்கு பற்றியிருந்தார்.