நிறுவனம்: சுற்றாடல் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுற்றாடல் கழகம் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி
வகை மன்றங்கள்
நாடு -
மாவட்டம் -
ஊர் -
முகவரி -
தொலைபேசி {{{தொலைபேசி}}}
மின்னஞ்சல் {{{மின்னஞ்சல்}}}
வலைத்தளம் {{{வலைத்தளம்}}}

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் சுற்றாடல் கழகமானது முதன் முதலில் 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 21.03.2024 சுற்றாடல் முன்னோடிக் கழகத்தின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தருடன் கலந்துரையாடப்பட்டு பதக்கங்கள் பெற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. இக் கழகத்தின் செயற்பாடுகளில் உதாரணங்கள் சில.

  • தரம் மாணவர்களுக்கான முன்னோடிப் பதக்கத்திற்கான செயற்பாடுகளும் சுற்றாடல் பற்றிய 4 விரிவுரைகளும் பாடசாலை ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
  • மாணவர் பாராளுமன்ற சுற்றாடல் அமைச்சுடன் சேர்ந்து பாடசாலை வளாகத்தைச் சிரமதானம் மூலம் தூய்மையாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
  • டெங்கு ஒழிப்புச் சிரமதானம் மூலம் பாடசாலை வளாகம் துப்பரவு செய்யப்பட்டது.
  • பாடசாலை வளாகத்தில் காணப்படும் பிளாஸ்டிக் பொலித்தீன் குப்பைகள் அகற்றப்பட்டன.


கல்லூரியின் எதிர்காலத் தேவைகள்.

  • மாணவர் கற்றல் கற்பித்தற் செயற்பாட்டிற்கு உகந்த வகையில் மாடிக் கட்டிடத் தொகுதி உரிய தளபாட வசதிகளுடன் அவசிய தேவையாக உள்ளது.
  • கல்லூரியின் பிரதான மண்டபமாகிய விசாலாட்சி சிவகுருநாதர் மண்டபம் சகல வசதிகளுடன் கூடியதாக மீள் திருத்தம் செய்யவேண்டியுள்ளது.
  • 21ம் நூற்றாண்டு கற்றல் நடவடிக்கைக்கு ஏற்ற வகையில் திறன் வகுப்பறைகளை மீள் திருத்தம் செய்தல். உயர்தர வகுப்பு விஞ்ஞான ஆய்வுகூடங்களை மீள் திருத்தம் செய்தல்.
  • உள்ளக விளையாட்டரங்கு ஒன்றை உருவாக்குதலும் அதற்கு தேவையான உபகரண வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.கூடைப்பந்தாட்டத்திடலின் சீமெந்துத் தரை செப்பனிடவேண்டியுள்ளது. விளையாட்டு மைதான பார்வையாளர் கூட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படவேண்டியுள்ளது.கல்லூரியின் மின்சார செலவினங்களைக் குறைக்கும் வகையில் மேலும் சூரிய படல் (Solar System) பொருத்தப்படவேண்டியுள்ளது.
  • பாடசாலை நூலகம் விருத்தி செய்யப்படவேண்டிய நிலையில் உள்ளது. இவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் கல்லூரி மாணவரின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அடைவு மட்டம் அதிகரிக்கப்படும்.
  • சிவத்தமிழ் மானிட விடியற் கழகத்தினால் நடாத்தப்பட்ட கருத்தரங்கில் இக் கழக மாணவிகளும் ஆசிரியரும் கலந்துகொண்டதோடு, J/ 101 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேச மக்களுக்கு டெங்கு நோய்த் தடுப்பு விழிப்புணர்விற்கான அறிவுரைகளை இக் கழக ஆசிரியரும், மாணவிகளும் இல்லந்தோறும் சென்று வழங்கியமை குறிப்பிடத்தக்கது.