நிறுவனம்:யாழ்/ வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில்
பெயர் | யாழ்/ வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வல்வெட்டித்துறை |
முகவரி | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் கோவில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் வல்வெட்டித்துறை எனும் இடத்தில் அமைந்துள்ளது.
வல்வை முத்துமாரியம்மன் கோயில் கற்பக் கிரகம் இருத்தும் இடத்தில் இரவு நேரங்களில் ஒரு ஒளிக்கீற்று காணப்பட்டதாக அந்தப்பகுதி மக்கள் கூறி அந்த திசையை நோக்கி வணங்கி வந்தனர். அந்த வெளிச்சத்தைப் பலமுறை கண்டு பரவசமடைந்த வல்வை வாசி ஒருவர் அவ்விடத்தில் ஒரு சிறிய கொட்டில் கட்டி பக்தியுடன் பூசை செய்து வழிபட்டு வந்தார். இதுவே வல்வை முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றின் மூலமாக கருதப்படுகின்றது.
அந்த வகையில் நல்லூர் இராஜதானி உச்சம் பெற்றிருந்த காலத்தில் கூளங்கை சிங்கையாரியன் வந்த காலம் தொடக்கம் அம்பாளின் வணக்கமுறைகள் இடம் பெற்று வருகின்றன.வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில் 1795 இல் புண்ணியர் என்பவரால் கட்டப்பட்டது எனக் காட்டப்பட்டுள்ளது.அன்று தொடக்கம் வல்வை மக்களால் காலத்திற்கு காலம் கோயில் கோபுரம் மற்றும் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு, அழகூட்டப்பட்டு வந்தது. இன்று இராஜதானி போன்று அற்புதமான கட்டடத்தில் அம்பாள் குடியிருந்து அருளாட்சி புரிந்து வருகின்றார்.
சித்திராபௌர்ணமியில் தீர்த்தோற்சவம் வரும் வகையில் நிகழும் 15 நாள் உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஈழத்திலும் தமிழகத்திலும் வல்வை முத்துமாரியம்மன் வழிபாட்டிற்கும் என ஒரு தனித்துவம் இருப்பதை இன்று காணலாம். இன்று மூன்று அழகிய சித்திரத்தேர்களில் அம்பாள், முருகன், பிள்ளையார் ஆகிய தெய்வங்களுடன் காத்தவராயரும் வீதி உலாவரும் காட்சி அற்புதமாக இருக்கும். அன்னையின் வீதி உலா வருகை உலகத்தமிழினத்திற்கு அருள்பாலிக்கும் வருகையாக இருக்கவேண்டும்.