நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம்
பெயர் | யாழ்/ புங்குடுதீவு பிரான்சிஸ் சவேரியார் தேவாலயம் |
வகை | கிறிஸ்தவ தேவாலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | புங்குடுதீவு |
முகவரி | 2ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவு 2ஆம் வட்டாரத்தில் புனித பிரான்சிஸ் தேவாலயம் அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயத்தின் வரலாறு நூறு வருடங்களுக்கு மேற்பட்டதாகும். ஆரம்பகால கட்டத்தில் சிறு ஆலயமாக உருவெடுத்து தற்பொழுது பெரிய ஆலயமாக உருவெடுத்துள்ளது.
1545 இல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான போராட்டத்தில் பாரத கிறிஸ்தவர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. இக் கொடுமைகளை தாங்கமுடியாத மக்கள் தாயகத்தை விட்டு வெளியேறி கடல் வழியாகப் பயணத்தைத் தொடங்கி இலங்கை வடபுலத்தில் உள்ள தீவுகளில் குடியேறினர். இக் காலகட்டத்தில் தமது தொழில்நிமித்தம் கரையோரமாகச் சென்ற போது பேழை ஒன்று கரையில் ஒதுங்கி இருப்பதைக் கண்டு மகிழ்வுடன் அதை எடுத்துக் கொண்டு தம் இருப்பிடத்தை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியில் தங்கள் பாதை மாறித் தீவின் மத்தியை அடைந்தார்கள். தாங்கள் பாதை மாறி வந்ததை உணர்ந்த அவர்கள் மீண்டும் பயணத்தைத் தொடர ஆயத்தமாகி பேழையைத் தூக்கினார்கள். அவர்களால் அதை அசைக்க முடியவில்லை. அதனால் அவர்களுக்கு ஆச்சரியம் மேலிடவே உடனே பேழையை உடைத்தனர். அதனுள் புதுப்பொலிவுடன் ஜோதியாய் ஒளிவீசும் புனித சவேரியாரின் திருச்சுரூபம் இருக்கக் கண்டு மெய்சிலிர்த்துப்போகவே உடனே முழங்கால் படியிட்டுச் சுரூபத்தை வணங்கினர். பின் பேழையை ஆலமரத்தின் கீழே விட்டுவிட்டு வீடு சென்று சகலருக்கும் இச் செய்தியை அறிவித்தனர். கடல்கடந்த தேசத்திலும் இறைவன் தங்களுக்கு பாதுகாப்பாப்பாக இருப்பதை நன்றி உணர்வோடு எண்ணிய மக்கள் புனிதருக்கு அவ் இடத்திலேயே ஆயயம் அமைத்து வழிபட ஆரம்பித்தனர். தற்பொழுது மக்கள் மீளக்குடியேறிய பின் சகல பங்கு மக்களின் ஒத்துழைப்புடனும் ஆலய புனரமைப்புப் பணிகள் நடைபெற்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 124-126